மத்திய பட்ஜெட் 2023 ஆனது இன்னும் சில வாரங்களில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் என்பது பல நாடுகளில் அதிகரித்துள்ள நிலையில், பல நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையில் பொருளாதார வளர்ச்சியினை முடக்கி விட பல்வேறு விதமான மறுசீரமைப்புகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசுகள் உள்ளன. இந்த தருணத்தில் மத்திய பட்ஜெட் 2023 தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இதில் பல முக்கிய அறிவுப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி உச்ச வரம்பு
பட்ஜெட் 2023ல் வருமான வரி வரம்பில் மிகப்பெரிய மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் உள்ள நடுத்தர மக்கள் குறைந்த வரி செலுத்தும் வகையில் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருமான வரி வரம்பை பொறுத்து 10%, 20% மற்றும் 30% வரையில் வருமான வரி விகிதத்திலும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த நாட்டில் வரி அதிகம் ?
இந்தியாவினை காட்டிலும் வளர்ந்த நாடுகளில் கூட இந்தியாவினை விட குறைவாகவே வரி விகிதம் உள்ளது. இந்தியாவில் வருமான வரி விகிதம், கூடுதல் கட்டணம், செஸ் என பலவும் சேர்த்து 42.744% வரையில் உள்ளது. இதே ஹாங்காங்கில் 17%மும், சிங்கப்பூரில் 22%மும், மலேசியாவில் 30% வரியும் விதிக்கப்படுகிறது.
80டிடிஏ
ஒரு நிதியாண்டில், வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து 10,000 ரூபாய் வரை ஈட்டப்படும் வட்டித் தொகைக்கு, வருமான வரி சட்டம் 1961 பிரிவு 80டிடிஏ-வின் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரிவு 80சி யின் படி அனுமதிக்கப்பட்டுள்ள விலக்கு தொகைக்கு மேலாகவே 80டிடிஏ வரி விலக்கு தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த 10,000 ரூபாய் வரம்பு என்பதை, 50,000 ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 80டிடிபி-யின் மூலம் மூத்த குடி மக்கள் 50,000 ரூபாய் வரையில் சலுகை பெறலாம். இதிலும் அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்கு விலக்கு
தொடர்ந்து அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில் கல்வித் துறையில் போட்டிகளும் அதிகரித்து வருகின்றது. குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்காக வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வரி விலக்கு பெறுவதற்கு முக்கிய பிரிவு 80சி மூல 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரி விலக்கு பெறலாம். இந்த விலக்கு விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்சூரன்ஸ் பீரிமியத்திற்கு விலக்கு
பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு செலுத்தப்படும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் வருடத்திற்கு ரூ.25,000 வரை பிரிவு 80D கீழ் வரி விலக்கு பெறலாம்,
உங்கள் பெற்றோரில் யாரேனும் அல்லது இருவருமே மூத்த குடிமக்களாக இருந்தால் (60 வயது மற்றும் அதற்கு மேல்), நீங்கள் வருடத்திற்கு 50,000 ரூபாய் வரை வரிச் சலுகையைப் பெறலாம். இந்த வரம்பு ரூ.1 லட்சம் வரை அதிகரிக்கப்பட வேண்டும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது
மகப்பேறு பயன் திருத்த திட்டம்
மகப்பேறு பயன் திருத்த திட்டம் 2017ன் படி, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை, பணியிடங்களில் குழந்தைகளுக்கான இடவசதி ஆகியவை இதில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இதில் வரி விலக்கு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இதில் குழந்தைகள் பாதுகாப்பக வசதியை, நிறுவனத்தால் வழங்கப்படுவது குறித்தும் அரசு பரிசீலனை செய்யலாம்.
80ஜிஜி
மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஹெச் ஆர் ஏ இருக்கும். சில நிறுவனங்களில் இது இருக்காது, சொந்த வீடு இல்லாதவர்களும் 60,000 ரூபாய் வரையில் ரசீது கொடுத்து வருமான வரி விலக்கு பெறலாம்.
வீட்டில் இருந்து பணிபுரிவர்களுக்கு?
கொரோனாவின் வருகைக்கு பிறகு பல துறையிலும் வீட்டில் இருந்து பணி புரிந்து வருகின்றனர். இதனால் வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு செலவுகள் கூடியுள்ளது எனலாம். ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும்போது அவர்கள் பயன்படுத்தும் டேபிள், சேர், டீ, காபி, லைட்டிங், ஏசி, பேன் வசதி என அனைத்தையும் நிறுவனமே கொடுக்கும். ஆனால் வீட்டில் இருந்து பணிபுரியும்போது இதனை ஊழியர்களே பெற்றுக் கொள்ளும் சூழலில் உள்ளனர். ஆக இதற்காக வரி விலக்கு அவர்களுக்கு அளிக்கப்படலாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications