சென்னை: இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் வருமான வரி தாக்கலின் போது பெரிய பிரச்சினையை சந்திக்கின்றனர். ஆனால் இது பெரும்பாலும் பொதுவெளியில் பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது.
ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் நோட்டீஸ் பீரியடை முடிக்காமல் வேறு நிறுவனத்திற்கு பணி மாறும்போது தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர் திடீரென அந்த நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்கிறார்.

அப்போது அந்த நிறுவனம் குறிப்பிட்டு இருக்கும் நோட்டீஸ் பீரியட் முழுவதும் அவரால் அந்த பணியில் இருக்க முடியவில்லை. இவ்வாறு நோட்டீஸ் பீரியடில் பணி செய்யாமல் விட்டதற்காக அந்த நிறுவனம் அந்த ஊழியரின் சம்பளத்தில் கணிசமான தொகையை அபராதமாக பெறுகிறது.
அதேவேளையில் அவர் செல்லக்கூடிய புதிய நிறுவனம் உடனடியாக வந்து வேலைக்கு சேர்ந்ததற்காக அந்த ஊழியருக்கு பழைய நிறுவனம் விதித்த அபராத தொகையை போனஸாக வழங்குகிறது. ஆனால் வருமான வரி துறையோ பழைய நிறுவனம் வழங்காமல் விட்ட தொகையையும் வருமானமாகவே கருத்தில் கொள்கிறது.
உதாரணமாக மணி என்ற ஊழியர் மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். திடீரென அந்த நிறுவனத்தில் வேலையை ராஜினாமா செய்து வேறு நிறுவனத்திற்கு சென்று விடுகிறார். பழைய நிறுவனம் இரண்டு மாதங்கள் நோட்டீஸ் பீரியட்டில் பணி செய்யாமல் திடீரென வேலையை விட்டதற்காக மணியிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை அபராதமாக பெறுகிறது.
அதே வேளையில் மணி புதிதாக வேலைக்கு சென்று நிறுவனம் அந்த 2 லட்சம் ரூபாயை அவருக்கு இழப்பீடாக வழங்குகிறது. ஆனால் வருமான வரி கணக்கு தாக்கலின் போது மணியின் வருமானம் 12 மாதங்களுக்கும் 12 லட்சம் ரூபாய் சம்பளம் மற்றும் 2 லட்சம் ரூபாய் கூடுதல் தொகையை சேர்த்து 14 லட்சம் ரூபாய் என கணக்கில் கொள்ளும். அவருக்கு கிடைத்த சம்பளம் 12 லட்சம் ரூபாய் தான், ஆனால் 14 லட்சம் ரூபாய்க்கு அவர் வரி செலுத்த வேண்டும்.
மணிக்கு அபராதம் விதித்த பழைய நிறுவனமும் இந்த 2 லட்சம் ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டும். அதாவது ஒரு தொகைக்கு இரண்டு பேர் வரி செலுத்துகின்றனர். நம் வருமான வரி சட்டம் சம்பள வருமானத்தை due or receipt என்ற வரையறையில் கணக்கீடு செய்கிறது. அதாவது ஊழியருக்கு சம்பளம் செலுத்தப்பட்டாலும் செலுத்த படாவிட்டாலும் அதனை செலுத்தப்பட்டதாகவே கணக்கில் கொள்கிறது. இதுதான் பணி மாறுதல் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு நோட்டீஸ் பீரியடில் பணி செய்யாததற்காக நிறுவனம் விதிக்க கூடிய அபராத தொகைக்கு தீர்வு வழங்கும் வகையில் எந்த ஒரு பிரிவும் வருமான வரி சட்டத்தில் இல்லை. இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் வரக்கூடிய பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு கொண்டு வர வேண்டும் என ஊதியதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக படிவம் 16இல் நிறுவனங்கள் ஊழியரிடம் பிடித்தம் செய்த தொகையை தனியாக குறிப்பிட்டு நிகர ஊதியத்தில் சேர்க்காதபடி அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications