ஒரு கடைக்காரர் இந்தியாவில் அதிகபட்ச சில்லறை விலையை, அதாவது MRP விலையை விட அதிகமாக வசூலித்தால், அது சட்டவிரோதமானதாகவும், சட்டத்தை மீறுவதாகவும் கருதப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளை நாம் ஒரு முறையாவது சந்தித்திருப்போம் அதுவும் ரயில் நிலையங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு MRP விலையை விட அதிக விலையில் விற்பனை செய்வார்கள். ஆனால் அப்படி விற்கப்படுவது சட்டத்திற்கு புறம்பானது. அதன் விவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
MRP என்றால் என்ன?: அதிகபட்ச சில்லறை விலை என்பது எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவைக்கும் சில்லறை விற்பனையாளரால் நுகர்வோருக்கு விதிக்கப்படும் அதிகபட்ச விலையாகும். இதனை மீறி எந்த ஒரு கடைக்காரரும் விலையை நிர்ணயிக்க கூடாது. உதாரணமாக ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் MRP விலை 10 ரூபாய் என்றால், அதற்கு நீங்கள் 10 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். அதை மீறி கடைக்காரர் உங்களிடம் கேட்டால் நீங்கள் அது குறித்து புகார் அளிக்கலாம்.

MRP என்பது அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது மற்றும் உற்பத்தி செலவு, போக்குவரத்து மற்றும் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளரால் ஏற்படும் பிற செலவுகள் ஆகியவற்றை சேர்த்து உள்ளடக்கியது.
சில்லறை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க இந்திய அரசாங்கம் MRP விலையைக் கொண்டு வந்தது. மேலும் MRP விதிமுறைகளை மீறினால் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே ஒரு பொருளின் சரியான விலையை தெரிந்து கொண்டு வாடிக்கையாளர் வாங்கும் விதமாக MRP விலை பொருள்களின் பேக்கேஜிங்கில் கொடுக்கப்பட்டிருக்கும். அதையும் மீறி கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில், நீங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
ஒரு கடைக்காரர் MRP-க்கு மேல் கட்டணம் வசூலித்தால் என்ன செய்வது?: ஒரு கடைக்காரர் MRP-ஐ விட அதிகமாக வசூலித்தால், வாடிக்கையாளர் கடை அமைந்துள்ள மாநிலத்தின் லீகல் மெட்ராலஜி டிபார்ட்மென்ட்டிடம் (Legal Metrology Department) புகார் அளிக்கலாம்.
வாடிக்கையாளர் 1800-11-4000/ 1915 என்ற கன்ஸ்யூமர் ஹெல்ப் லைன் நம்பரை தொடர்பு கொள்ளலாம் அல்லது அந்தந்த மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் மன்றத்தில் புகார் அளிக்கலாம்.
ஒருவர் 8800001915 என்ற எண்ணிற்கு SMS செய்யலாம். NCH APP மற்றும் Umang App மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.
https://consumerhelpline.gov.in/user/signup.php என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் வாடிக்கையாளர், கடைக்காரர் குறித்து ஆன்லைனில் புகார் செய்யலாம். குறைகளை தெரிவிக்க ஒரு முறை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய, http://consumerhelpline.gov.in என்ற இணைய தளத்திற்குச் சென்று, தேவையான விவரங்களைக் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
இதனை மீறும் பட்சத்தில், கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படலாம், மேலும் நுகர்வோர் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட தொகைக்கு இழப்பீடு பெற உரிமை உண்டு. எனவே, நுகர்வோர் வாங்குவதற்கு முன் ஒரு பொருளின் MRP-யை சரிபார்த்து, அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகாரளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளிக்கும் பட்சத்தில் முதல் முறை வரும் புகாருக்கு 25,000 ரூபாயும், 2-வது முறை வரும் புகாருக்கு 50,000 ரூபாயும், 3-வது முறை வரும் புகாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications