உலகின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் மாபெரும் பங்குதாரராக இருக்கும் வாரன் பஃபெட்டின் நெருங்கிய நண்பரும், முதலீட்டு வழிகாட்டியும், பெர்க்ஷயர் ஹாத்வே சிறப்பான முறையில் உருவாக உறுதுணையாக இருந்தவரும், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் துணை சேர்மேனாக இருந்தவருமான சார்லஸ் முங்கர் 99 வயதில் உடல்நலக் குறைவால் மறைந்தார்.
வாரன் பஃபெட் இங்கிலாந்து ஜவுளி நிறுவனத்தை வியக்கத்தக்க வகையில் வெற்றிகரமான முதலீட்டு நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனமாக மாற்றியமைக்கும் பயணத்தில் முக்கிய பங்காற்றியவர் சார்லஸ் முங்கர்.

வாரன் பஃபெட் உடன் பணியாற்ற சார்லஸ் முங்கர் தனது நீண்ட கால வழக்கறிஞர் பணியை விட்டு வெளியேறினார். சார்லஸ் முங்கர் தனது 99 வயதில் மருத்துவமனையில் மறைந்தார் எனப் பெர்க்ஷயர் ஹாத்வே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. சுமார் 2.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் பட்டியலில் இருக்கும் சார்லஸ் முங்கர்-க்கு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வீடு இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாரன் பஃபெட் 1950 முதல் பல ஆண்டுகளாகத் திவாலாகக் கூடிய நிலையில், சிறு முதலீடு கொடுத்தால் மீண்டு வர முடியும் என்ற கட்டமைப்பில் இருக்கும் நிறுவனங்களைத் துறை வாரியாக அதிகளவில் கைப்பற்றித் தனது வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். இந்த முதலீட்டு வழக்கத்தின் பெயர் Buying cigar butts என்று வாரன் பஃபெட் அழைப்பது உண்டு.
இந்த நிலையில் தான் வாரன் பஃபெட்-ஐ சார்லஸ் முங்கர் தொடர்பு கொண்டு, நீ பெரிய மற்றும் நிலையான நிறுவனத்தை உருவாக்க வேண்டுமெனில், பிற முதலீட்டாளர்களை முந்தி அதிக லாபத்தைப் பெற வேண்டுமெனில் பெரிய மற்றும் வலிமையான பிராண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதன் பின் சார்லஸ் முங்கர், வாரன் பஃபெட்-ன் முதலீட்டுக்கான ப்ளூ பிரின்ட் வழங்கினார். சரியான பிஸ்னஸ்-ஐ வியத்தகு விலையில் வாங்குவதைக் காட்டிலும். வியத்தகு வர்த்தகத்தைச் சரியான விலையில் வாங்குவது என்ற எளிய முதலீட்டு ஐடியாவை முன்வைத்தார். இதன் அடிப்படையில் தான் Berkshire Hathaway வேகமாக வளர துவங்கியது.
சார்லஸ் முங்கர், வாரன் பஃபெட் சுமார் 50 வருடங்களாக ஒன்றாக இணைந்து பணியாற்றி வருவது மட்டும் அல்லாமல் வரலாற்றுச் சிறப்பு மிக்க முதலீடுகளைச் செய்து வருகின்றனர். இவர்கள் கூட்டணி அமெரிக்க முதலீட்டுச் சந்தையில் தனிச் சிறப்பை கொண்டு உள்ளது என்றால் மிகையில்லை.
Berkshire Hathaway நிறுவனம் இன்சூரன்ஸ் நிறுவனமான Geico, பர்லிங்டன் நார்தன் சான்டஃபி ரெயில் ரோடு நிறுவனம் போன்ற பெரிய நிறுவனங்களை வாங்கியது மட்டும் அல்லாமல் கோகோ கோலா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஐபிஎம், வெல்ஸ் பார்கோ, பேடிஎம் எனப் பல பெரிய கார்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. 2022 முடிவில் Berkshire Hathaway குழுமத்தில் சுமார் 3,72,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்.
1839 ஆம் ஆண்டு Valley Falls நிறுவனமான துவங்கி 1960களில் Berkshire Hathaway ஆகப் பல இணைப்புகளுக்குப் பின்பு மாறியது இந்த டெக்ஸ்டைல் சாம்ராஜ்ஜியம். 1962ல் சிறிய அளவிலான பங்குகளை வாங்கத் துவங்கிய வாரன் பஃபெட் அடுத்த 5 வருடத்தில் Berkshire Hathaway நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வாங்கி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கினார்.
1970 முதல் Berkshire Hathaway-வின் சேர்மன் ஆக இருக்கும் வாரன் பஃபெட், 1978 முதல் துணை சேர்மன் ஆகச் சார்லஸ் முங்கர் இருக்கிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications