செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, தனது ஐந்தாவது தலைமுறை ஏஐ மாடலான GPT-5-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இது, தற்போது பயன்பாட்டில் உள்ள ChatGPT போன்ற சேவைகளுக்குப் பின்னணியில் செயல்படும் முக்கிய நுண்ணறிவு மாடல் ஆகும்.
GPT-5 பற்றி நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மன் கூறுகையில், "இதுவரை எங்கள் சிறந்த மாடல். குறிப்பாக, கோடிங் மற்றும் தானாக செயல்படும் செயல்பாடுகள் செய்வதில் மிக சிறப்பாக செயல்படுகிறது. இந்தியா, செயற்கை நுண்ணறிவை (AI) ஏற்கும் பணியில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக மாறி வருகிறது. இந்தியாவின் ஏஐ பங்கு மற்றும் ஆர்வம், உலகளவில் மிகவும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வளர்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்தியா, தற்போது OpenAI-வின் இரண்டாவது பெரிய சந்தை ஆகும். ஆனால், விரைவில் இந்தியா எங்களுடைய முக்கியமான முதலாவது சந்தையாக மாறும் என நான் நம்புகிறேன். இந்திய மக்களும், நிறுவனங்களும் AI-யை வேகமாக ஏற்றுக் கொள்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆல்ட்மன் இந்தியாவுக்கான தயாரிப்புகளை மேம்படுத்துவதில் OpenAI பெரிதும் கவனம் செலுத்தி வருவதையும், AI-யை இந்தியர்களுக்காக சிறப்பாகவும், மலிவாகவும் உருவாக்குவதே எங்களுடைய நோக்கம். வளர்ச்சி வேகம் காரணமாக இந்தியாவுக்காக அதிக கவனம் செலுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.
ChatGPT தலைவரான நிக் டர்லி, OpenAI நிறுவனத்தின் புதிய GPT-5 மாடல் இந்தியாவின் 12-க்கும் மேற்பட்ட மொழிகளில் மிகச் சிறந்த புரிதலை வழங்கும் திறன் கொண்டதாக கூறியுள்ளார். இது இந்தியாவின் பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஏற்றதாக, AI பயன்பாட்டை மேலும் விரிவாக்குவதற்கு உதவும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
GPT-5 மாடல் மூன்று அளவுகளில் வெளிவந்துள்ளது. gpt-5, gpt-5 mini, gpt-5 nano ஆகியவை தான். இது டெவலப்பர்களுக்கு செயல்திறன், செலவு மற்றும் தாமதம் ஆகியவற்றில் தங்களுக்கேற்ற மாற்று தேர்வுகளை செய்ய அதிகத் தகுதிகளை வழங்கும்.
OpenAI-வின் ஒரு ப்ளாக் பதிவில், GPT-5 ChatGPT-இல் reasoning, non-reasoning மற்றும் router மாடல்களின் தொகுப்பு ஆகும். API வெர்சனில் GPT-5 என்பது அதிக செயல்திறனை வழங்கும் மாடல் ஆகும். குறைந்த திறன் கொண்ட GPT-5 API மாடல், ChatGPTயில் பயன்படுத்தப்படும் non-reasoning மாடல் அல்ல. இது டெவலப்பர்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ChatGPTயில் உள்ள அத்தர்க்க மாடல் API-யில் gpt-5-chat-latest என்ற பெயரில் கிடைக்கிறது. GPT-5 2025 ஆகஸ்ட் 7 முதல் துவங்கி உள்ளது. இது Free, Plus, மற்றும் Pro பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த புதிய GPT-5 மாடல் இந்தியாவின் பன்மொழி சூழலுக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications