இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமம். பெட்ரோல் கெமிக்கல், தொலைத்தொடர்பு சேவை என ரிலையன்ஸ் குடுழுமம் கால் பதிக்காத துறையே கிடையாது. அப்படி அவர்கள் எங்கே இறங்கினாலும் அதில் வெற்றி தான். சுய தொழில் புரிபவர்களுக்கும் ,வளர்ந்து வரக்கூடிய தொழில் முனைவோருக்கும் மிகப்பெரிய ஒரு முன் உதாரணமாக இருப்பவர்தான் முகேஷ் அம்பானி .

ஒரு தொழிலை எப்படி தொடங்க வேண்டும் அதை எப்படி முன்னேற்ற வேண்டும் என்பது குறித்து இவர் தெரிவிக்கக்கூடிய கருத்துக்கள் பலரது கவனத்தையும் பெரும் . அந்த வகையில் முதன்முறையாக முகேஷ் அம்பானி வளர்ந்து வரக்கூடிய ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசி இருப்பது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. குறிப்பாக கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு அவர் மிக முக்கியமான ஒரு அறிவுரையை வழங்கி இருக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார் . அப்போது உரையாற்றிய அவர் தற்போது உலக அளவில் சக்தி வாய்ந்த பொருளாதாரமாக இருக்கக்கூடிய நாடுகள் எல்லாமே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வலுவான அடிப்படையை கொண்டு இருக்கின்றன என கூறுகிறார்.
தற்போது அமெரிக்காவை நாம் பெருமையாக பார்க்கிறோம் பெரிய நாடாக கவனிக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் அங்கே உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் தரும் பல்கலைக்கழகங்களும் அதிகம் இருக்கின்றன என கூறியிருக்கிறார். இந்தியாவை பொறுத்தவரை இது இந்தியாவுக்கான நேரம் என கூறியிருக்கும் அவர் மற்ற நாடுகளை விட நாம் சிறப்பாக இப்போது செயல்பட்டாக வேண்டி இருக்கிறது என தெரிவித்தார் .
மாணவர்கள் எப்பொழுதுமே பெரிய அளவில் கனவு காண வேண்டும் எந்த ஒரு விஷயத்தையும் ஆர்வத்துடன் அணுக வேண்டும் என அறிவுரை வழங்கி இருக்கிறார். ஆர்வம் எந்த வயதில் உங்களை விட்டு போக கூடாது என்றும் வாழ்க்கையில் வெற்றி பெற அது மிக முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது சாட் ஜிபிடி வந்துவிட்டது நீங்கள் எது கேட்டாலும் அது பதில் அளிக்கும் , ஆனால் நீங்கள் சரியான கேள்வியை கேட்கிறீர்களா என்பதில் தான் விஷயம் இருக்கிறது என கூறியிருக்கிறார் . அனைவரும் அணுகும் வகையில் ஏஐ தொழில்நுட்பம் மாறிவிட்டது .ஆனால் சிறந்த கேள்வியை கேட்பவர்களால் மட்டுமே இதில் வெல்லவும் முடியும் சிறந்த தலைவராக உருவாகவும் முடியும் என கூறியிருக்கிறார்.
மாணவர்கள் எப்போதுமே ஆர்வத்துடன் விஷயங்களை அணுக வேண்டும், சிந்திக்கும் திறனை ஒருபோதும் இழந்து விட கூடாது என அவர் அறிவுரை வழங்கியுள்ளார். பெரிய கனவு காணுங்கள் அது நம் தேசத்தையே கட்டி எழுப்பும் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications