டெக் உலகை புரட்டிப்போடும் வகையில் எல்லோரும் வியந்து பார்த்த ஏஐ தொழில்நுட்பத்தை மக்கள் தினமும் உள்ளங்கையில் வைத்து பயன்படுத்தும் வகையில் சாட்ஜிபிடி என்ற ஏஐ சாட்பாட்டை உருவாக்கினார் சாம் ஆல்ட்மேன். சாட்ஜிபிடி அறிமுகம் பல டெக் சேவைகளைப் பெரிய அளவில் மாற்றியுள்ளது, ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் புதிய வாய்ப்பை கொடுத்துள்ளது.
இத்தகைய மாபெரும் தொழில்நுட்ப புரட்சியையும் சாட்ஜிபிடி-ஐ உருவாக்கிய சாம் ஆல்ட்மேன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை யார் தொடுத்தது என்பது தான் இப்போதைய முக்கியமான கேள்வி.

ஓபன்ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் மீது அவரது சகோதரி அன்னா ஆல்ட்மேன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டுச் சுமத்தி வழக்குத் தொடுத்துள்ளார். அன்னா ஆல்ட்மேன் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், தனக்கு மூன்று வயதாக இருந்தபோது தொடங்கி, டீனேஜ் பருவம் வரையில் தனது சகோதரர் தன்னை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மிசோரியில் தாங்கள் வளர்ந்து வந்த போது இது நிகழ்ந்ததாகவும், காலப்போக்கில் இந்த கொடுமைகள் தீவிரமடைந்ததாகவும் அன்னா ஆல்ட்மேன் தனது வழக்கில் குற்றம் சாட்டியுள்ளார்.
சாம் ஆல்ட்மேன் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்துள்ளனர். சமூக ஊடக தளமான எக்ஸ்-ல் வெளியிடப்பட்ட அறிக்கையில், சாம் ஆல்ட்மேன், அவரது தாய் மற்றும் அவரது சகோதரர்கள் இந்த குற்றச்சாட்டுகள் "முற்றிலும் உண்மையற்றவை" என்றும், இந்த வழக்கும், குற்றச்சாட்டும் மொத்த குடும்பத்திற்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. சாட்ஜிபிடி பெரும் வெற்றி அடைந்தது தாண்டி பல போராட்டங்களுக்குப் பின்பு தான் சாம் ஆல்ட்மேன் இந்நிறுவனத்தின் முழு அதிகாரத்தைக் கைப்பற்றினார். ஆனாலும் சாட்ஜிபிடி உருவாக்கிய OpenAI நிறுவனத்தில் பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை.
தற்போது OpenAI நிறுவனத்தை லாப நோக்கமற்ற நிறுவனமாக மாற்றும் முயற்சியில் சாம் ஆல்ட்மேன் இறங்கியுள்ளார், ஆனால் இதற்கு பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில் அவ்வப்போது எலான் மஸ்க் OpenAI நிறுவனத்தை விமர்சனம் செய்துவிட்டுப் போகிறார். தற்போது சாம் ஆல்ட்மேன் மீது பாலியல் வழக்கு விழுந்துள்ளது, இதில் இருந்து எப்படி மீண்டு வருவார் என்பது தான் அடுத்த முக்கியமான கேள்வியாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications