செயற்கை நுண்ணறிவு துறை நாளுக்கு நாள் புதிய வளர்ச்சியை எட்டி வருகிறது. குறிப்பாக ஜெனரேட்டிவ் ஏஐ மாடல்கள் அனைத்து துறைகளிலும் கால் பதிக்க தொடங்கிவிட்டன. இதற்கு முக்கிய காரணம் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என கூறலாம். சாட் ஜிபிடி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே பல்வேறு புதிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இலவசமாக சாட் ஜிபிடி பயன்படுத்துபவர்களுக்கு நவீன புகைப்பட உருவாக்க வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. சாட் ஜிபிசி தற்போது உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படக்கூடிய ஒரு ஏஐ தளமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாம் பல்வேறு தகவல்களையும் யோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடிகிறது. சாட் ஜிபிடி இலவசமாக பயன்படுத்துபவர்களுக்கு குறிப்பிட்ட வசதிகளையும் ப்ரீமியம் முறையில் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் அம்சங்களையும் வழங்கி வருகிறது.

அந்த வகையில் சாட் ஜிபிடியின் பிளஸ் பயனாளர்களுக்கு மட்டுமே கிடைத்த அதிநவீன இமேஜ் உருவாக்கம் வசதியான DALL-E 3 தற்போது இலவசமாக சாட் ஜிபிடியை பயன்படுத்துபவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சாட் ஜிபிடி பிளஸ் பயனாளர்களை போலவே சாட் ஜிபிடி பயனாளர்களும் இதை பயன்படுத்தி படங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
இதன்படி ஒரு பயனர் ஒரு நாளைக்கு இரண்டு படங்களை DALL-E 3 மூலம் இலவசமாக உருவாக்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட் ஜிபிடி வழியாக நாம் எந்த மாதிரியான படம் வேண்டும் என்பதற்கான கட்டளையை வெளியீடு செய்தால் போதும். அது நாம் எதிர்பார்க்கக் கூடிய படங்களை உருவாக்கி நமக்கு தந்துவிடும். இலவசமாக சாட் ஜிபிடி பயன்படுத்துபவர்களும் DALL-E 3 இமேஜ் கிரியேஷன் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாட் ஜிபிடிக்கு போட்டியாக பல்வேறு தளங்கள் தற்போது சந்தையில் வந்திருக்கும் நிலையில் ஓப்பன் ஏஐ நிறுவனம் இலவசமாக அதனை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த புகைப்படங்களை உருவாக்கக்கூடிய DALL-E 3 அம்சம் ஆகும். இதன் மூலம் ஏராளமானவர்கள் அன்றாடம் அடிப்படையில் சாட் ஜிபிடி பயன்படுத்துவார்கள் என்றும் தங்களின் பயனாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் ஓபன் ஏஐ நம்புகிறது. சாட் ஜிபிடி பயனாளர்கள் எப்படி இதனை பயன்படுத்தி படங்களை உருவாக்கலாம் என்பது குறித்த விளக்க வீடியோவையும் சாட் ஜிபிடி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications