இணைய உலகை புரட்டிப்போட்டு உள்ள அமெரிக்க நிறுவனமான OpenAI நிறுவனத்தின் ChatGPT தொழில்நுட்பம் பெரும் அதிர்வலையை உலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ChatGPT-க்கு போட்டியாகவும், ChatGPT-ஐ விடவும் சிறப்பான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என கூகுள், எலான் மஸ்க் உடன் உலகின் பல நாடுகள் தீவிரமான முயற்சியில் களமிறங்கியுள்ளது.
ஒருபக்கம் அமெரிக்காவின் ChatGPT-ஐ ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட நிலையில், பல மாதங்களுக்கு முன்பே இத்துறையில் பணியாற்ற துவங்கியது. இதன் வெளிப்பாடாக ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் Sberbank, அமெரிக்காவின் OpenAI நிறுவனத்தின் ChatGPT-க்கு போட்டியாக GigaBot என்ற புதிய AI Chatbot தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

GigaChat தற்போது பொது மக்களுக்கு அறிமுகம் செய்யப்படாவிட்டாலும், அழைப்பின் பேரில் இதை பயன்படுத்த முடியும். இதன் சோதனை கட்டத்தை கடந்த பின்பு மக்களுக்கு அறிமுகம் செய்யும் போது செயற்கை நுண்ணறிவு துறையில் இருக்கு Chatbot-க்கு பெரும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் AI chatbot technology போட்டியில் ரஷ்யாவும் களத்தில் இறங்கியுள்ளது.
அமெரிக்கா ChatGPT-க்கு தற்போது வட கொரியா, சீனா, ரஷ்யா, இத்தாலி ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளது. இதேவேளையில் சீனாவும், ரஷ்யாவும் சொந்த AI chatbot technology-ஐ உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யா வெளிநாட்டு தொழில்நுட்பம், சேவைகளை சார்ந்து இருப்பதை குறைக்க முடிவு செய்திருக்கும் நிலையில் ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் Sberbank, AI chatbot தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் களமிறங்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சீனாவின் அலிபாபா குரூப் ஹோல்டிங் நிறுவனம் புதிதாக ChatGPT போல் AI large language மாடலான Tongyi Qianwen என்ற தளத்தை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்க நிறுவனங்களான ChatGPT, Bard-க்கு போட்டியாக சீனாவில் Baidu நிறுவனம் Ernie என்ற GPT தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில் அலிபாபாவும் வந்துள்ளது, அமெரிக்காவுக்கு தற்போது மூன்று முனையில் போட்டி உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications