இனி வாட்ஸ் அப்பிலும் ChatGPT.. புதிய அம்சத்தை கொண்டு வர இருக்கும் ஓபன் ஏஐ!

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் பலரின் வேலையை எளிதாக்கியுள்ளது. அப்படித்தான் ஓபன் ஏஐ நிறுவனம் கொண்டு வந்த பிரபல சாட் பாட்டான ChatGPT-ஐ பல்வேறு வேலைகளை செய்வதற்காக பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின், ChatGPT-ஐ எளிதாக மக்கள் பயன்படுத்தும் விதமாக ஒரு புதிய வழியை அறிமுகம் செய்துள்ளது. 1800 என்ற ஃபோன் நம்பரை டயல் செய்வதன் மூலமாக கால் அல்லது வாட்ஸ் அப்பில் பயனர்கள் ChatGPT-யிடம் எளிதாக சேட் செய்ய முடியும்.

1800-ChatGPT எப்படி வேலை செய்கிறது?: 1800 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுக்க ஓபன் ஏஐ கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாட்ஸ் அப் செய்திகளை தனிப்பட்ட ChatGPT கணக்குகளுடன் இணைப்பதற்கும் ஓபன் ஏஐ பணியாற்றி வருகிறது. இது பயனர்களுக்கு தனிப்பட்ட அனுபவத்தை வழங்கும். ஏனெனில் ஒவ்வொரு பயனரின் தேடலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். உதாரணமாக ஒரு சிலர் தங்கள் பணிக்காக தேடக்கூடும். ஒரு சிலர் தங்கள் குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களை தேடி இருப்பார்கள். எனவே தங்களின் தனிப்பட்ட அனுபவங்களை வைத்து உரையாடும் அம்சங்களில் பணியாற்ற ஓபன் ஏஐ தயாராகி வருகிறது.

 இனி வாட்ஸ் அப்பிலும் ChatGPT.. புதிய அம்சத்தை கொண்டு வர இருக்கும் ஓபன் ஏஐ!

ஓபன் ஏஐ வழங்கும் இந்தப் புதிய அம்சத்தின் மூலம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் புதிதாக பயன்படுத்துபவர்களுக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இணையதளத்தில் பயன்படுத்தப்படும் ChatGPT பதிப்பை விட வாட்ஸ்அப் மற்றும் கால் மூலம் கிடைக்கும் இந்த பதிப்பு எளிமைப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது பயனர்களுக்கு பழக்கமான சேனல்களைப் போலவே உதவும் என்றும் கூறப்படுகிறது. மேம்பட்ட அம்சங்கள், அதிக பயன்பாடு போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள பயனர்கள் எப்பொழுதும் போல இணையதளங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இந்த அம்சம் தற்போது அமெரிக்க பயனர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக கிடைக்கிறது.

கூகுள் நிறுவனமும் GOOG-411 என்ற பெயரில் இதே போன்ற சேவையை 2007-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த சேவை ChatGPT-ஐ போல் அல்லாமல் வெறும் குரல் அடிப்படையிலான சேவையை வழங்கியது. அதன் பிறகு 2019-ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் காரணமே இல்லாமல் இந்தச் சேவையை நிறுத்தியது. போதுமான குரல் டேட்டாவை சேகரித்த பிறகு இந்த சேவை மீண்டும் தொடரலாம் என்று சிலர் யூகிக்கின்றனர்.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தினசரி வேலைகளில் பெரிதும் உதவி வருகிறது வாட்ஸ் அப் மற்றும் கால் மூலம் ChatGPT-ஐ தொடர்பு கொள்ளும் வசதி பிற பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டால் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உதவிகரமானதாக இருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+