உலக மக்களின் தூக்கத்தை கெடுத்த ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனத்தின் சிஇஓ-வான சாம் ஆல்ட்மேன் 6 நாடுகள் சுற்று பயணத்தில் இந்தியாவுக்கு வந்துள்ளது அனைவருக்கும் தெரியும். சாம் ஆல்ட்மேன் பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டு இருக்கும் வேளையில் இந்தியாவில் AI மற்றும் ChatGPT-க்கு மக்கள் ஆதரவு அளிப்பதை கண்டு பெருமையாக இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
OpenAI நிறுவனம் பல முக்கியமான திட்டங்களில் பணியாற்றி வரும் இந்த பிசியான காலக்கட்டத்தில் சாம் ஆல்டமேன் 6 நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதை உலக நாடுகள் முக்கியமானதாக பார்க்கிறது. இந்திய சுற்றுப்பயணம் குறித்து ஏற்கனவே இந்திய டெக் ஊழியர்கள் மிகவும் ஆர்வமாக இருந்த நிலையில் சாம் ஆல்ட்மேன் தன்னுடைய காலேஜ் ரூம்மேட் உடனான சந்திப்பு அழகாக இருந்தது.

சாம் ஆல்ட்மேன் அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டு இருந்த போது அவருடைய ரூம்மேட் மற்றும் MapmyIndia நிறுவனத்தின் சிஇஓ-வான ரோஹன் வர்மா-வை நேரில் சந்தித்தார். இந்த சிறப்பான சந்திப்பின் போட்டோவை ரோஹன் வர்மா தனது டிவிட்டரில் பகிர்ந்தார்.
ரோஹன் வர்மா ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டு இருந்த போது சாம் ஆல்ட்மேன் freshman year அதவாது முதல் வருடத்தில் இருவருடம் ஒரே dorm-ல் தங்கியுள்ளனர். சாம் ஆல்ட்மேன் ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் 2 வருடம் மட்டுமே கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார், அதன் பின்பு படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு Loopt என்னும் மொபைல் ஆப் நிறுவனத்தின் முழு நேர ஊழியராக சேர்ந்தார்.

ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தை விட்டு பாதியிலேயே விட்டுவிட்டு Loopt நிறுவனத்தில் சேர்வதற்கு என்ன காரணம்..? அப்படி Loopt நிறுவனம் என்ன செய்தது..? Loopt என்னும் மொபைல் ஆப் நிறுவனம் நண்பர்கள் தங்களுடைய லோகேஷன்-ஐ ஷேர் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இந்த ஐடியாவில் ஈர்க்கப்பட்டு Loopt நிறுவனத்தில் சேர்ந்தார்.
சாம் ஆல்ட்மேன் சந்திப்பு மிகவும் சிறப்பான விஷயம், அவர் உலகமே வியக்கும் நபராக இருந்தாலும், எனக்கு என்னுடைய நண்பன், dormmate என அழகாக உரிமையுடன் டிவிட்டரில் பதிவிட்டார் MapmyIndia நிறுவனத்தின் சிஇஓ-வான ரோஹன் வர்மா. இந்த போட்டோ-வுக்கும் இந்தியாவில் பிற சாம் ஆல்ட்மேன் போட்டோவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.


Click it and Unblock the Notifications