சீன பொருட்கள் வேண்டாம்.. மலிவான சீன பொருட்களால் மட்டும் லாபம் முடியாது.. JSW சஜ்ஜன் ஜிண்டால்..!

இந்திய சீன எல்லையில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் மக்கள் மத்தியிலும், சில நிறுவனங்கள் மத்தியிலும் கூட ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது எனலாம்.

இதற்கிடையில் பல தொழில் அதிபர்களும் மக்களின் கருத்துக்கு தங்களது ஆதரவினை தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஜேஎஸ்டபள்யூ நிறுவனத்தின் தலைவர், சீனாவின் மலிவான சீன மூலப்பொருட்களை வாங்குவதன் மூலம் மட்டும் பணம் சம்பாதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கடுமையான வார்த்தையினை சீனா மற்றும் இந்திய எல்லையில் இந்தியா ராணுவ வீரர்கள் வீர மரணம் இந்த தருணத்தில் வந்துள்ளது கவனிக்கதக்கது.

சீனாவின் மலிவான பொருட்கள்

சீனாவின் மலிவான பொருட்கள்

இந்திய வணிகங்களின் மன நிறைவானது சீனாவின் மலிவான பொருட்களை சார்ந்து இருக்கும் வகையில் உள்ளது, அவற்றை உள்நாட்டில் வளர்ப்பதை விட, அவர்களின் வணிகம் மற்றும் ஆரோக்கியமான தொடர்ச்சியையும் பராமரிப்பது முக்கியம். ஆக இதனால் அவர்களில் பலர் வருத்தமடைந்துள்ளனர்.

இது இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பு

இது இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பு

ஆனால் கண்மூடித்தனமாக இந்திய உள்நாட்டு உற்பத்தியாளர்களை வளர்ப்பதை விட, சீனாவிலிருந்து மலிவான இறக்குமதியை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வதில் நம்முடைய மன நிறைவு காரணமாக இந்த வருத்தம் உள்ளது. எனினும் தற்போதைய சீனா இந்திய எல்லை பிரச்சனையானது, இந்தியர்கள் ஒண்றிணைந்து ஆத்மா நிர்பர் பாரத்க்கு வாய்ப்பாக அமையும்.

வணிகத்தினை ஆதரிக்க வேண்டும்

வணிகத்தினை ஆதரிக்க வேண்டும்

ஆக நாம் உள்நாட்டு உற்பத்தியை ஆதரிப்போம். சொந்த தயாரிப்புகளுக்கு விசுவாசத்தை காட்டுவோம். அவர்களின் தரம் மற்றும் அளவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். சீனாவுக்கு எதிராக நிற்க இந்தியாவின் வணிக சமூகம் மற்றும் ஆயுதப்படைகளையும் அரசாங்கத்தினையும் ஆதரிக்க வேண்டும் என்றும் ஜிண்டால் கூறியுள்ளார்.

இறக்குமதியை குறைக்க முடிவு

இறக்குமதியை குறைக்க முடிவு

கடந்த வாரத்தில் ஜேஎஸ்டபள்யூ குழுமத் தலைவரும், ஜே எஸ் டபள்யூ சிமெண்ட்டின் நிர்வாக இயக்குனருமான சஜ்ஜன் ஜிண்டாலின் மகனுமான பார்த் ஜிண்டால், சீனாவிலிருந்து நிறுவனம் இறக்குமதியை குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போதைய இறக்குமதியான 400 மில்லியன் டாலர்களில் இருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் சீனாவிலிருந்து இறக்குமதியை பூஜ்ஜியமாக குறைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். ‘

இறக்குமதியை குறைக்க உறுதி

இறக்குமதியை குறைக்க உறுதி

மேலும் ஜே எஸ் டபள்யூ குழுமம் ஆண்டுதோறும் 400 மில்லியன் டாலர் அளவிலான இறக்குமதியினை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதனை அடுத்த 24 மாதங்களில் எங்கள் இறக்குமதியினை பூஜ்ஜியமாக குறைக்க நாங்கள் உறுதியளிக்கிறோம் என்றும் கூறியுள்ளார். அதோடு சமீப காலத்தில் பல இந்திய நிறுவனங்கள் சீன இறக்குமதியினை நம்புவதை நிறுத்த நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கத்தினை ஆதரித்தன.

சீனாவுக்கு மாற்றுவழி

சீனாவுக்கு மாற்றுவழி

உதாரணத்திற்கு பிரபல நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம், தனது பொருட்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலதன பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், அதற்கான மாற்று வழிகளை காண ஆலோசித்து வருவதாக கூறியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+