ஓரங்கட்டும் ஜியோ! ஒதுங்கும் ஏர்டெல் & வொட.ஐடியா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலத்தில் 1 ஜிபி டேட்டாவை ஊறுகாய் போல பார்த்து பார்த்து பயன்படுத்திக் கொண்டிருந்த நாம், இன்று பிரியாணி கணக்காக டேட்டாவை பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம்.

இன்று நாள் ஒன்றுக்கு ஒரு ஜிபி அல்லது 1.5 டேட்டா எல்லாம் போதாமல், மீண்டும் தனியாக ரீசார்ஜ் செய்து டேட்டாவைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம் என்றால் பாருங்களேன்..?

இப்படி டேட்டா பயன்பாடு பட்டி தொட்டி எங்கும் பரவி இருக்கிறது... வெப் சீரிஸ் எல்லாம் ஹிட் அடித்துக் கொண்டு இருக்கிறது... சீரியல்களை எல்லாம் ஆன்லைனில் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் ஜியோ தான் என்றால் அது மிகையில்லை.

அட இது தான் நல்ல சான்ஸ்.. இந்த நல்ல வாய்ப்பை யூஸ் பண்ணுங்க.. CEA கிருஷ்ணமூர்த்தி..!அட இது தான் நல்ல சான்ஸ்.. இந்த நல்ல வாய்ப்பை யூஸ் பண்ணுங்க.. CEA கிருஷ்ணமூர்த்தி..!

அசுர வருகை

அசுர வருகை

கடந்த செப்டம்பர் 2016-ல் முழுமையாக இந்திய டெலிகாம் சந்தையில் குதித்த பின், இவர்கள் அடித்து ஆடிய ஆட்டத்தை நாம் லைவ்வாகப் பார்த்தோம். ஜோடி 10 ரூபாய் மேனிக்கு வியாபாரம் செய்தார் முகேஷ் அம்பானி. விளைவு... ஒரு கட்டத்தில் ஏர்டெல், வொடாபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் வெளிப்படையாக தடுமாறத் தொடங்கின. வொடாபோன் ஐடியா இரண்டும், ஒரே நிறுவனமாக இணைக்கப்பட்டது. ஏர்டெல் தன் சேவைகளை மேலும் வலுப்படுத்தினார்கள்.

நஷ்டம்

நஷ்டம்

இப்படி போட்டியாளரின் அழுத்தம் போக, உச்ச நீதிமன்றம் வேறு டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக AGR கணக்கீடு வழக்கில் தீர்ப்பளித்தது. ஏர்டெல் சுமாராக 25,000 கோடி மற்றும் வொடபோன் ஐடியா சுமாராக 35,000 கோடி ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டி வந்தது. விளைவு, கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் சுமாராக 23,000 கோடி ரூபாயும், வொடாபோன் ஐடியா சுமாராக 50,000 கோடி ரூபாயும் நஷ்டமடைந்தது.

விலை ஏற்றம்

விலை ஏற்றம்

இந்த கொடூர நஷ்டத்துக்குப் பின், வாடிக்கையாளர்களைப் பிடிக்க அடித்துக் கொண்டது போதும். இனியாவது கொஞ்சம் லாபம் பார்க்கலாம் என ரிலையன்ஸ் ஜியோ, வொட. ஐடியா, ஏர்டெல் என அனைவரும் ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலையை அதிகரித்தார்கள். சுமாராக 40 சதவிகிதம் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்துக் கொண்டார்கள்.

என்ன பார்க்கப் போகிறோம்

என்ன பார்க்கப் போகிறோம்

இந்த விலை ஏற்றத்துக்குப் பின், எந்த டெலிகாம் நிறுவனம் எவ்வளவு ரூபாய் ரீசார்ஜ்-க்கு என்ன சேவை வழங்குகிறார்கள் என்று ஒப்பிட்டுப் பார்த்தால் மீண்டும் சில ஆச்சர்யத் தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. எல்லா திட்டங்களையும் ஒப்பிட முடியாது என்பதால் ஜியோ, ஏர்டெல், வொட. ஐடியா ஆகிய நிறுவனங்களின், 28 நாட்கள் வேலிடிட்டி உடன், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கொடுக்கும் ரீசார்ஜ் திட்டங்களை மட்டும் ஒப்பிட்டு இருக்கிறோம்.

திணறடிக்கும் ஏர்டெல்

திணறடிக்கும் ஏர்டெல்

279 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டம்
முதன்மை சேவைகள்:
28 நாள் வேலிடிட்டி
நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்
கூடுதல் சேவைகள்:
4 லட்சம் ரூபாய்க்கு ஹெச் டி எஃப் சி லைஃப் இன்சூரன்ஸ்
விங்க் மியூசிக்
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்
ஷா அகாடமி
ஃபாஸ்டேக் கேஷ் பேக் 150 ரூபாய்
இலவச ஹலோ டியூன்ஸ்
நம் ஸ்மார்ட்ஃபோனுக்கான ஆன்டி வைரஸ்.
குறிப்பு: ஏர்டெல்லில், லைஃப் இன்சூரன்ஸ் இல்லாமல் 249 ரூபாய்க்கு இதே சேவைகளுடனும் இன்னொரு ரீசார்ஜ் திட்டமும் இருக்கிறது.

மய்யம் வொடாபோன் ஐடியா

மய்யம் வொடாபோன் ஐடியா

249 ரூபாய்க்கு வொடாபோன் ஐடியாவின் ரீசார்ஜ் பேக்
முதன்மை சேவைகள்:
28 நாள் வேலிடிட்டி
நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்
கூடுதல் சேவைகள்:
வொடாபோன் ப்ளே சப்ஸ்கிரிப்ஷன்
ஜீ5 சப்ஸ்கிரிப்ஷன்.

சீப் ரேட் ஜியோ

சீப் ரேட் ஜியோ

199 ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோவின் ரீசார்ஜ் திட்டம்
முதன்மை சேவைகள்:
28 நாள் வேலிடிட்டி
நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா
ஜியோ டூ ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்
மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000 நிமிடங்கள் இலவசம்
நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்
கூடுதல் சேவைகள்:
ஜியோ அப்ளிகேஷன்கள் இலவசம்

வேற யாரு ஜியோ தான்

வேற யாரு ஜியோ தான்

ஏர்டெல் ஏகப்பட்ட கூடுதல் சேவைகளைக் கொடுத்து அதிக விலையில் ரீசார்ஜ் திட்டங்களைக் கொடுத்தாலும், நச்சென குறைந்த விலையில் கொடுக்க வேண்டிய சேவையை, நம் ரிலையன்ஸ் ஜியோ கொடுப்பதாகவே தெரிகிறது. வொடாபோன் ஐடியா இரண்டுக்குக் இடையில் நிற்கிறது. எனவே சீப் ரேட் ஜியோ தொடர்ந்து இந்திய டெலிகாம் சந்தையை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

ஒதுங்கும் கம்பெனிகள்

ஒதுங்கும் கம்பெனிகள்

இப்படி ஜியோ நன்றாக விலை குறைத்து தன் ரீசார்ஜ் திட்டங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பதைத் தெரிந்தும், ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியா தன் ரீசார்ஜ் திட்டங்களின் விலையைக் குறைப்பதாகத் தெரியவில்லை. ஆக ஜியோ தெளிவாக தன் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை வைத்து ஏர்டெல் மற்றும் வொடபோன் ஐடியாவை ஓரங்கட்டுவதாகத் தெரிகிறது. அதற்கு ஏர்டெல் மற்றும் வொட. ஐடியா ஒதுங்குவதாகத் தான் தெரிகிறது. ஏர்டெல் எப்போது பாயம்... பாய்ந்தாலும் ஜியோ என்கிற புலியை அடித்து காலி செய்ய முடியுமா..? தெரியவில்லை. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

cheapest recharge plan for 28 days with 1.5 gb data

Comparison between Airtel Reliance jio and Vodafone idea 28 days and 1.5 gb per day recharge plans.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X