நாட்டு மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி வரும் அரசு முதியோர்களுக்கு சுகாதார நலன்களை வழங்கும் விதமாக ஆயுஷ்மான் பாரத் யோஜனா (PMJAY) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தகுதியான பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசாங்க மருத்துவமனைகளில் இந்த திட்டத்தின் நலனை பெற முடியும் என்றாலும்.. அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த சேவை கிடைக்காது. இதனை நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும்.
வயதான காலத்தில் யாரையும் நம்பி இருக்காமல் அனைத்து முதியோர்களும் வசதியாக தங்களுக்கு தேவைப்படும் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் அரசு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சையை வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் முதியவர்கள் முதலில் ஆயுஷ்மான் பாரத் கார்டு பெற விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றை நீங்கள் PMJAY திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக சரிபார்த்துக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் அனைத்து தகுதியையும் பூர்த்தி செய்து இருக்கும் பட்சத்தில் உங்களால் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
இதயம் சார்ந்த நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்றுநோய், கண் புரை, மலேரியா, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, வால்வு அறுவை சிகிச்சை, புற்றுநோய்க்கான அறிவை சிகிச்சை என பல சிகிச்சைகளை இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் இத்திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் தேவைப்படும் சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும்.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனையை கண்டுபிடிப்பது எப்படி?: உங்கள் பகுதியில் உள்ள ஆயுஷ்மான் கார்டை எந்த மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்கின்றன என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், ஆன்லைனில் எளிதாகச் சரிபார்க்கலாம்.
ஸ்டெப் 1: முதலில் pmjay.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: முகப்புப்பக்கத்தில் "Find Hospital" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: கீழ்தோன்றும் மெனுவிலிருந்து உங்கள் மாநிலத்தைத் தேர்வுசெய்து உங்கள் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: நீங்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் எதைத் தேர்வு செய்கிறீர்கள் என்பதைக் குறிப்பிடவும்.
ஸ்டெப் 5: திரையில் காட்டப்படும் கேப்ட்சா குறியீட்டை என்டர் செய்யவும். உங்கள் பகுதியில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலைப் பார்க்க "Submit" என்பதைக் கிளிக் செய்யவும்.
தற்போது திரையில் உங்கள் ஊரில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் பட்டியல் காண்பிக்கப்படும் நீங்கள் அங்கு சென்று தேவைப்படும் மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.
ஆயுஷ்மான் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி?: முதலில் https://pmjay.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ PMJAY இணையதளத்த்திற்குச் செல்ல வேண்டும். ஹோம் பேஜில், 'Am I Eligible' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தகுதியைச் சரிபார்க்க வழிமுறைகளைப் பின்பற்றவும். "14555" என்ற கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் தனிநபர்கள் தங்கள் தகுதியைச் சரிபார்க்கலாம்.
நீங்கள் தகுதி பெறுபவராக இருந்தால்.. அடுத்தபடியாக பொது சேவை மையங்களுக்கு சென்று ஆயுஷ்மான் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டர் ஐடி, ஓட்டுனர் உரிமம் என பல்வேறு அரசாங்க ஆவணங்களை வைத்து விண்ணப்பிக்கலாம். தனிநபர்கள் தங்கள் ஆயுஷ்மான் கார்டை ஆன்லைனில் ட்ராக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு 70 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications