இன்றெல்லாம் தனிநபர்கள் தங்களுக்கு அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் பர்சனல் லோன்களைப் பெறுகின்றனர். அப்படி பெரும் லோன்களுக்கு எந்த வித பிணையமும் தேவைப்படுவதில்லை. வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு பர்சனல் லோன்களை வழங்கி வருகின்றனர். வங்கிகள் தற்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து பர்சனல் லோன்கள் வேண்டுமா? என்று கேட்கின்றனர். இது வசதியான ஒன்றாக இருந்தாலும் வட்டி விகிதங்கள் மற்றும் பிற விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
எந்தவித பினையமும் இல்லாமல் பர்சனல் லோன்கள் வழங்கப்படுவதால், இதற்கு கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடன் பெறுபவரின் வருமானம் ஆகியவை கருத்தில் கொள்ளப்படுகிறது. ஆனால் சில வங்கிகள் குறைந்த வருமானம் இருந்தாலும் பர்சனல் லோன்களை வழங்குகின்றன. அது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

குறைந்த சம்பளதாரர்களுக்கும் தனிநபர் கடன்களை வழங்கும் வங்கிகள்:
ஐசிஐசி பேங்க்: இங்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரையில் பர்சனல் லோன்கள் வழங்கப்படுகிறது. இதற்கான கடன் காலம் 6 ஆண்டுகள். மேலும் இங்கு வழங்கப்படும் பர்சனல் லோன்களுக்கு 10.85% முதல் வட்டி விகிதம் இருக்கும். உங்களுடைய சம்பளத்துக்கு ஏற்றார் போல் பர்சனல் லோன்கள் வழங்கப்படுகிறது.
HDFC பேங்க்: இங்கு அதிகபட்சமாக ரூ. 40 லட்சம் வரையில் லோன் கிடைக்கும். இதற்கான கடன் காலமும் 6 ஆண்டுகள். இங்கு 10.85% முதல் வட்டி விகிதம் இருக்கும்.
கோடக் மகேந்திரா பேங்க்: கோடக் மகேந்திரா பேங்கில் ரூ. 40 லட்சம் வரையிலான கடன்கள் வழங்கப்படுகிறது. இதற்கு கடன் காலமாக 6 ஆண்டுகள் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் பர்சனல் லோன்களுக்கு 10.99 சதவீத வட்டி விகிதம் இருக்கும்.
இண்டஸ்இண்ட் பேங்க்: இங்கு ரூ. 50 லட்சம் வரையிலான கடன்கள் வழங்கப்படுகிறது. இதன் கடன் காலமும் 6 ஆண்டுகள். இங்கு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதமாக 10.49 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ. 30 லட்சம் வரையிலான பர்சனல் லோன்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு வட்டியாக 11.45 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.
ஆக்சிஸ் பேங்க்: இங்கு அதிகபட்சமாக 10 லட்சம் வரையிலான வழங்கப்படுகிறது. இதற்கான கடன் காலம் 5 ஆண்டுகள். இங்கு வழங்கப்படும் 11.25 சதவீதம் முதல் வசூலிக்கப்படுகிறது.
பர்சனல் லோன் பெறுவதற்கான தகுதி: நீங்கள் குறைந்த சம்பளம் பெறும் தனிநபராக இருந்தாலும் அல்லது சுய தொழில் செய்பவராக இருந்தாலும் தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் கடன் வழங்குனர்கள் உங்களுடைய கடன் தகுதியை தீர்மானிக்க உங்கள் வேலை மற்றும் சம்பளத்தை கவனமாக மதிப்பிடுவார்கள்.
மேற்கண்ட 6 வங்கிகளில் நீங்கள் லோன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தவில்லை என்றால் வட்டிக்கும் வட்டி விதிக்கப்பட்டு கடன் சுமை அதிகரிக்கலாம். எனவே அவசர தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஐடியாவையும் பயன்படுத்தி பலன் அடையலாம். கடன் வாங்கும் போது அதை திருப்பி வட்டியுடன் நீங்கள் தான் செலுத்த வேண்டும் என்பதை நிலவில் கொண்டு கடன் பெறுங்கள். அவசர தேவைகள் மற்றும் பணம் பெற முடியாத சூழலில் இருக்கும் போது இது போன்ற கடன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பர்சனல் லோன்களை பெற்று அதை தேவையற்ற விஷயங்களுக்காக செலவு செய்வது நிதி சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு முடிவெடுங்கள்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications