சென்னை: ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது மாறுபடுகிறது. எனவே இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்னவாக உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தினமும் காலை 6 மணி அளவில் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMC) தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் விலையை நிர்ணயிக்கும். இந்த எண்ணெய் நிறுவனங்கள் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களை பொறுத்து ஒவ்வொரு நாளைக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கிறது. இதன் மூலம் தினமும் எரிபொருள் விற்பனையை பற்றி நுகர்வோர் அறிந்திருப்பதை உறுதி செய்யும் வகையில் இருக்கும்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் சரக்கு கட்டணம், டேக்ஸ் மற்றும் உள்ளூர் வரிகள் போன்ற விஷயங்களுக்கு உட்பட்டது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகிறது.
அதன்படி ஏப்ரல் 14, 2024 நிலவரப்படி டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை 87.62 ரூபாயாக உள்ளது மற்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94.72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 104.21 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 92.15 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.98 ரூபாயாக உள்ளது மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 92.56 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 103.94 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு லிட்டர் டீசல் விலை 90.76 ரூபாயாக உள்ளது. நொய்டாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94.80 மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 87.93 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. லக்னோவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94.65 ரூபாயாக உள்ளது மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 87.76 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெங்களூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99.84 ரூபாயாக உள்ளது மேலும் ஒரு லிட்டர் டீசல் விலை 85.93 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107.41 ரூபாயாக உள்ளது மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 95.65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஜெய்ப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 104.88 ரூபாயாக உள்ளது மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 90.36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107.25 ரூபாயாக உள்ளது மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 96.13 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. புவனேஸ்வரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.60 ஆக உள்ளது மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 93.16 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கச்சா எண்ணெயின் உலகளாவிய விலையின் அடிப்படையில் தினமும் காலை 6 மணிக்கு ஓஎம்சி நிறுவனங்கள் எரிபொருள் விலையை மாற்றியமைக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்திக்கான முதன்மையான மூலப் பொருளாக கச்சா எண்ணெய் இருக்கிறது. எனவே, கச்சா எண்ணெயின் விலை ஏறும் போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுகிறது.
மேலும் மேலே குறிப்பிட்டுள்ள இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடலாம். எனவே, உண்மையான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிய, உங்கள் ஊரில் இருக்கும் பெட்ரோல் பங்குகளை பார்வையிடவும்.


Click it and Unblock the Notifications