சென்னை: ஏப்ரல் 13 அன்று இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தாக்குதல் ஆரம்பித்ததால் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் பேரல் ஒன்றுக்கு $100 டாலராக உள்ளது. மேலும் கச்சா எண்ணெயின் இறக்குமதியாளராக இருக்கும் இந்தியா 85 சதவீத எண்ணெய்யை பிற நாடுகளிடமிருந்து பெறுகிறது. இதனால் அவர்களிடம் இருந்து பெரும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்தே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இருக்கிறது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் காரணமாக, ஏப்ரல் 15 அன்று கச்சா எண்ணெயின் ஒரு பேரல் விலை $90.03 டாலராக இருந்தது. இந்தியன் ஆயில் செகரட்டரி பங்கச் சர்மா, கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை உயர்வது கவலை அளிப்பதாக இருக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும் மார்ச் 14, அன்று சில எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் ரூ.2 ரூபாய் விலையை குறைத்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் நிர்ணயம் அந்நிய செலவாணி, சரக்கு கட்டணம் மற்றும் வரிகள் போன்ற அனைத்து தாக்குதல்களுக்கும் உட்பட்டது. இதன் விளைவாகவே வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விலைகள் உள்ளன.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94.72 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 87.62 ரூபாய். மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14.21 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 92.15 ரூபாய். கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.75 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 92.34. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.75 மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 92.34. நொய்டாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94.81 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 87.94 ரூபாய். குருகிராமில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 95.18 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 88.03 ரூபாய். சண்டிகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94.22 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 82.38. ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107.39 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 95.63 ரூபாய். ஜெய்ப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 104.86 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 90.34. பாட்னாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105.16 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 92.03 ரூபாய். லக்னோவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94.63 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை 87.74 ரூபாய். பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தி செய்வதற்கான முதன்மையான பொருளான கச்சா எண்ணெயின் விலையை பொருத்து இந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வெவ்வேறு மாநிலங்களுக்கும் நிர்ணயிக்கப்படுகிறது.
உங்கள் நகரத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் சமீபத்திய விலைகளை, நீங்கள் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் இந்தியன் ஆயிலின் வாடிக்கையாளராக இருந்தால் RSP என்று டைப் செய்து உங்களது சிட்டி கோடுடன் 9224992249 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். நீங்கள் BPCL வாடிக்கையாளராக இருந்தால், RSP என்று டைப் செய்து 9223112222 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம். எனவே உண்மையான விலையை தெரிந்து கொள்ள அருகில் இருக்கும் பெட்ரோல் பங்குகளை அணுகவும்.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications