இந்திய தொழிலதிபர்களில் அம்பானிக்கு அடுத்ததாக பரபரப்பாக பேசக்கூடிய ஒரு நபர் தான் கௌதம் அதானி. இந்திய பணக்காரர்களில் ஒருவராகவும் பெரிய தொழில் குழும தலைவராகவும் கௌதம் அதானி செயல்பட்டு வருகிறார்.
கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழும நிறுவனங்கள் விமான நிலையங்கள் ,துறைமுகங்கள் மேம்பாடு மற்றும் பராமரிப்பு , சிமெண்ட் உற்பத்தி , புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பொருட்கள் உற்பத்தி என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் அதானி நிறுவனம் கணக்கு வழக்கில் முறைகேடு செய்திருப்பதாகவும் பங்கு விலையை செயற்கையாக அதிகரித்து இருப்பதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் ஒரு குற்றச்சாட்டை வெளியிட்டது .

2023ஆம் ஆண்டு ஜனவரியில் ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம் அதானி குழுமம் பல முறைகேடுகளில் ஈடுபடுவதாக தெரிவித்தது. இதனை அடுத்து அதானி குழுமத்துக்கு சொந்தமான பங்குகள் வேகமாக சரிய தொடங்கின. கிட்டதட்ட 50% வரை பங்கு மதிப்புகள் சரிந்து முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டமடைந்தனர், அதானியின் சொத்து மதிப்பே குறைய தொடங்கியது.
ஹிண்டன்பர்க் அறிக்கை கௌதம் அதானிக்கு பெரும் தலைவலியாக மாறியது . இருந்தாலும் அதானி குழுமமும் கௌதம் அதானியும் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக மறுத்த வண்ணம் இருந்தனர் . நாடு முழுவதுமே இந்த குற்றசாட்டுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியன. அரசியல் கட்சிகள் கூட அதானியின் இந்த விவகாரத்தை பெரிய அளவில் பேசினர் . உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு நடத்தப்பட்டது.
இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியும் ஹிண்டன்பர்க்கின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் அதானி மற்றும் அவரது நிறுவனத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என செபி அறிவித்திருக்கிறது .
முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் எந்த விதி மீறலும் இல்லை என தெரிவித்திருக்கும் செபி,இதற்காக அதானி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ அல்லது அபராதம் விதிப்பதற்கோ எந்த ஒரு அடிப்படையும் இல்லை என தெரிவித்துள்ளது. செபியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அதானி குழுமம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் விரிவான விசாரணைக்கு பிறகு ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரம் மற்றவை என செபியே உறுதி செய்திருக்கிறது என கூறியுள்ளது.
நாங்க எப்பொழுதுமே வெளிப்படை தன்மைக்கு முக்கியத்துவம் அளிப்போம் என தெரிவித்திருக்கும் அதானி குழுமம் இந்த மோசடியான மற்றும் புனையப்பட்ட அறிக்கையால் முதலீட்டாளர்கள் தானே இழப்பை சந்தித்தனர் என குறிப்பிட்டு இருக்கிறது . தவறான கதைகளை பரப்பியவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications