செயற்கை நுண்ணறிவு பல மாற்றங்களை வர்த்தக சந்தையிலும், டிஜிட்டல் சேவையிலும் மாற்றி வரும் வேளையில் ஊழியர்கள் AI எழுச்சியால் வேலைவாய்ப்பை இழக்க கூடும் என கணிப்புகள் வெளிவரும் வேளையில் தற்போது முதல் முறையாக ஒரு நிறுவனமே வீழ்ச்சி அடைந்து டிஜிட்டல் சேவை பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள பள்ளி கல்வி புத்தகங்களை பப்ளிஷ், ஆன்லைன் வகுப்புகளை, பள்ளி குழுந்தைகளுக்கான ஹோம்வொர்க் செய்ய பல்வேறு உதவிகள் செய்யும் சிலிக்கான் வேலி ஸ்டார்ட்அப் நிறுவனமான CHEGG பங்குகள் 50 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

ChatGPT போன்ற ஜெனரேட்டிவ் AI சேட்பாட் எழுச்சி மூலம் CHEGG நிறுவனத்தின் வருவாய், வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்நிறுவனத்தின் சிஇஓ அறிவித்தார். 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதிலும், வருமானத்திலும் எவ்விதமான பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை...
ஆனால் மார்ச் மாதத்திற்கு பிறகு ChatGPT மீது மாணவர்களின் ஆர்வம் அதிகரித்த காரணத்தால் அதன் பயன்பாடும் அதிகரித்தது. இதனால் தற்போது எங்களுடைய வருவாய், வாடிக்கையாளர் எண்ணிக்கையில் பாதிப்பு உருவாகியுள்ளது என CHEGG நிறுவனத்தின் சிஇஓ Dan Rosensweig தெரிவித்தார்.

ChatGPT எழுச்சி காரணமாக CHEGG நிறுவனத்தின் விற்பனை கடந்த ஒரு வருடத்தில் 7 சதவீதமும், சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 5 சதவீதமும் சரிந்துள்ளது. இந்த தகவல் வெளியான அடுத்த நொடியே CHEGG நிறுவனத்தின் பங்குகள் தடாலடியாக சரிய துவங்கியுள்ளது.
மே 1 ஆம் தேதி வரையில் 17.59 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட CHEGG நிறுவனத்தின் பங்குகள் மே 2 ஆம் தேதி 8.76 டாலராக குறைந்து. ஓரே நாளில் 50 சதவீதம் சரிந்த நிலையில் ChatGPT -யால் வர்த்தக பாதிப்பு கொண்ட நிறுவனங்கள் அனைத்தும் உஷாராக வேண்டிய நேரம் வந்தாச்சு.


Click it and Unblock the Notifications