தமிழ்நாட்டில் அடுத்தடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டெக் நிறுவனங்கள் பெரும் நம்பிக்கையுடன் அலுவலகத்தை திறந்து வரும் வேளையில் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அதிகளவிலான டிஜிட்டல் சேவைகள் உருவாகி வரும் வேளையில், அனைத்து துறை நிறுவனங்களும் கிளவுட் சேவையை எளிதாக பயன்படுத்த துவங்கியுள்ளதால் இதற்கு பவர் கொடுக்க டேட்டா சென்டர்கள் மிகவும் அவசியமாக உள்ளது. இந்தியாவில் டேட்டா சென்டரை அமைப்பது தற்போது வேகமாக வளர்ச்சி அடையும் முக்கிய வர்த்தக துறையாக மாறி வருகிறது குறிப்பிடத்தக்கது.

டேட்டா சென்டர் பிரிவில் பிரபலமான நிறுவனமாக இருக்கும் தி வெப் வெர்க்ஸ் மற்றும் அயர்ன் மவுண்டன் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், சென்னை அம்பத்தூர் பகுதியில் சுமார் நான்கு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, இரண்டு புதிய டேட்டா சென்டர் ப்ராஜெக்ட்களான CHE-1 மற்றும் CHE-2 ஆகியவற்றை நிறுவ உள்ளது.
சென்னையில் இந்த திட்டத்திற்காக 1,800 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளது தி வெப் வெர்க்ஸ் மற்றும் அயர்ன் மவுண்டன் கூட்டணி. மேலும் இந்த இரண்டு டேட்டா சென்டர்களும் 36 மெகாவாட் ஐடி லோடு-ஐ ஆதரிக்கும் வகையில் கட்டப்படும்.
சென்னை-க்கு சிங்கப்பூர் மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளுடன் வலுவான தொடர்பு இருப்பதால், இந்தியாவின் மிக வேகமாக வளரும் டேட்டா சென்டர் சந்தைகளில் ஒன்றாக சென்னை உருவாகி வருகிறது. இப்பகுதியில் கிளவுட் சேவை வழங்குநர்கள், நெட்வொர்கிங் நிறுவனங்கள் மற்றும் பல நீர்மூழ்கி கேபிள் லேண்டிங் ஸ்டேஷன் ஆகியவற்றுடன் டேட்டா சென்டருக்கான எகோசிஸ்டம் அமைப்பு உள்ளது.
சென்னை இந்தியாவின் மிக முக்கியமான இணைப்பு மையங்களில் ஒன்றாக இருப்பதால், ஹைப்பர் ஸ்கேல், நெட்வொர்க், கன்டென்ட், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நிறுவன வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை வளர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என அயர்ன் மவுண்டன் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவரும் & உலகளாவிய பொது மேலாளருமான மார்க் கிட் கூறினார்.
வெப் வெர்க்ஸ் டேட்டா சென்டர்களின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிகில் ரதி கூறுகையில், அம்பத்தூர் புவியியல் அடிப்படையில் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. அம்பத்தூர் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை மற்றும் பொதுவாக நெரிசலான ஐடி பார்க் பகுதியில் இருந்து விலகி இருக்கும் காரணத்தால் எங்களுக்கு ஏதுவாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications