இந்தியாவில் அதிகப்படியான ஜிசிசி அலுவலகங்களை ஈர்ப்பதில் பெரும் போட்டி நிலவி வரும் வேளையில் சென்னை தொடர்ந்து டாப் 3 இடங்களில் இருக்கிறது. அமெரிக்கா முதல் ஜப்பான் வரையில் உலகில் பல நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களின் திறனை பயன்படுத்துவதற்காக மாநிலத்தின் பல பகுதிகளில் தங்களுடைய ஜிசிசி அலுவலகத்தை அமைந்து வருகின்றனர்.
இந்த வரிசையில் சுகாதார தொழில்நுட்பத் துறையில் பிரபலமான அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ரெவிலீர் நிறுவனம் (Reveleer), சென்னையில் தனது புதிய உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Center - GCC) இந்த வாரம் அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. இந்த புதிய அலுவலகத் திறப்பு, ரெவிலீர் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி என தெரிகிறது.

மக்கள் மத்தியில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) அடிப்படையிலான ஹெல்த்கேர் சொல்யூஷன்ஸ் தேவை அதிகரித்து வருவதை அடுத்து, டெக் மற்றும் சுகாதார துறைக்கு மத்தியில் பாலமாக இருக்கும் புதிய வகையிலான சேவைகள், தொழில்நுட்பத்தை உருவாக்கும் பொருட்டு Reveleer சென்னையில் அலுவலகத்தை திறந்துள்ளது.
சென்னை ஜிசிசி அலுவலகத்தை ரெவிலீர் நிர்வாகம், இந்நிறுவனத்தின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ப்ராடெக்ட் டெவலப்மென்ட், இன்ஜினியரிங், ஆப்ரேஷன்ஸ், Medical Coding மற்றும் Quality Assurance போன்ற துறைகளில் சென்னை அலுவலகத்தில் பணியுரியும் ஊழியர்கள் செயல்பட உள்ளனர்.
ரெவிலீர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெய் ஏக்கர்மேன் சென்னை ஜிசிசி அலுவலகம் குறித்து கூறுகையில், "எங்களது மதிப்பு அடிப்படையிலான ஹெல்த்கேர் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் வேளையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை வழங்குவதற்காக சென்னையில் அலுவலகத்தை திறந்துள்ளோம். மேலும், 2016 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ரெவிலீர் நிறுவனம் சிறப்பான கூட்டணிகளை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த புதிய சென்னை ஜிசிசி அலுவலகத்தை வழிநடத்தவும், அதன் வளர்ச்சியை மேற்பார்வையிடவும், சண்முகம் நாகப்பன் இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநராக ரெவிலீர் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் ஹீட்டிங், வென்டிலேஷன், ஏர் கண்டிஷனிங் மற்றும் HVACR சேவைகளை வழங்குவதில் உலகளாவிய முன்னணி நிறுவனமான லெனாக்ஸ் (Lennox), சமீபத்தில் சென்னையில் உள்ள அலுவலகத்தை 6 மில்லியன் டாலர் செலவில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்தது. இதன் மூலம் தற்போதைய ஆபீஸ் பரப்பளவு 150,000 சதுர அடியாக அதிகரிக்கும் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 900 லிருந்து 1,500 ஆக உயர்த்தும்.
மேலும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் சாப்ட்வேர் இன்ஜினியரிங் சேவைகளை வழங்கும் அசென்டியோன் (Ascendion), சென்னையில் தனது GenAI ஸ்டுடியோவைத் திறந்துள்ளது. மேலும் சென்னையில் இருந்துக்கொண்டு தனது உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கான ஜெனரேட்டிவ் AI சேவைகளை வழங்கும் மெகா திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

திடீரென 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா Zoho நிறுவனம்? உண்மை என்ன?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications