பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? மெட்ரோவில் சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு..!

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்திற்காக பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணமும் மேற்கொண்டார். அப்போது பிரதமருடன் முதலமைச்சர் விஜயும் மெட்ரோவில் பயணித்தார்.

பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போது சிலருக்கு மட்டும் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒருவர் தான் சென்னையை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனர். பிரதமரின் சென்னை வருகையில் அவரை சந்தித்து உரையாட சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அப்படி தான் வின்சென் லேப்ஸ் (Winsen Labs) என்ற ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர் தேஜஸ் பார்த்தசாரதி சுதர்ஷன் பிரதமர் மோடியிடம் தனது ஸ்டார்ட் அப் ஐடியாவை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? மெட்ரோவில் சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு..!

சென்னை விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி மெட்ரோ நிலையம் வரையிலான வழித்தடத்தில் மோடி பயணம் செய்த போது, பிரதமர் மோடியையும் இதர பிரமுகர்களையும் சந்தித்து உரையாடுவதற்காக, 'SPI சென்னை' அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 ஸ்டார்ட்அப் நிறுவனர்களில் தேஜஸ் சுதர்ஷனும் ஒருவர். இவர்களுக்கு பிரதமரிடம் பேச 1.5 நிமிடங்கள் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

தேஜஸ் சுதர்ஷனுக்கு பேச வேண்டிய முறை வந்தபோது, மெட்ரோ ரயில் விமான நிலைய நிலையத்தை நெருங்கியது. இதனால் தனது வாய்ப்பு கைநழுவி போய்விட்டது என அவர் நினைத்தாராம் ஆனாலும் பிரதமர் மோடி எல்லோருடைய கருத்துக்களையும் கேட்போம் என கூறி அவருக்கு வாய்ப்பு தந்துள்ளார். இதனை தேஜஸ் தனது லிங்குடின் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read

90 விநாடிகள் தான் தனக்கு கிடைத்த நேரம் என்றும் அந்த நேரத்தில் தனது ஸ்டார்ட் அப் ஐடியா குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்ததாகவும் அவர் பகிர்ந்துளார். பிரதமர் மோடி மிகவும் கவனமாக காதுகொடுத்து கேட்டு, அவரது நேரம் முடிவதற்குள் சில கேள்விகளையும் எழுப்பினார் என அவர் கூறியுள்ளார்.

மாணவர்கள் எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்துடன் திறம்பட செயல்படும் வகையில், கல்வியுடன் நிஜ உலக பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முறையை இணைக்க வேண்டும் என்ற ஸ்டார்ட் அப் ஐடியா குறித்து பிரதமரிடம் விளக்கினாராம். அரசாங்கத் துறைகளும் பல்கலைக்கழகங்களும் மாணவர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற யோசனைகளை முன் வைத்தாராம்.

Recommended For You

குடிமக்கள் வெவ்வேறு அரசுத் துறைகளுக்குத் தனித்தனியாக அலைவதை தவிர்க்க, அனைத்துத் துறைகளையும் இணைக்கும் வகையிலான ஒற்றை சாளர ஏஐ உதவி மையத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார். இதன் மூலம் பொதுமக்கள் ஒரே முறை தங்களது புகார்களை பதிவேற்றம் செய்தால் போதுமானது. அதன்பிறகு, ஒரு ஏஐ ஏஜென்ட் அந்த கோரிக்கைகளை கண்காணித்து, சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு மேலும் நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைக்கும் என்ற ஸ்டார்ட் அப் ஐடியாவையும் விளக்கினாராம்.

தன் வாழ்வில் இந்த 1.5 நிமிடங்கள் முக்கியமான ஒரு வாய்ப்பு என கூறியுள்ளார் தேஜஸ் சுதர்ஷன். இவர் முன்பு 'KPMG India' நிறுவனத்தில் பணியாற்றியவர், Fanpit என்ற ஒரு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பயின்றவர். தற்போது சென்னையை தலைமையிடமாக கொண்டு வின்சென் லேப்ஸ் என்ற ஏஐ ஸ்டார்ட் அப்பை நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+