சென்னை: தற்போது நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் சிறிய ரக விமானங்களை வடிவமைத்துள்ளது. இதற்கான முதல் கட்ட நிதி திரட்டலில் இந்நிறுவனம் 118 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இபிளேன் (ePlane ) என்ற நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மின்சாரத்தில் இயங்கக்கூடிய சிறிய விமானங்களை இபிளேன் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மேற்கொண்டு தங்கள் பணிகளை விரிவாக்கம் செய்ய இந்நிறுவனம் நிதி திரட்டலில் ஈடுபட்டது. இதில் 118 கோடி நிதி திரட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.
நகரங்களுக்கு இடையே சிறிய ரக மின்சார விமானங்களை இயக்கும் பொருட்டு இந்த நிறுவனம் விமானங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஏர் டாக்ஸி எனப்படும் இத்தகைய விமானங்களை தயாரிப்பதற்காக முதல் கட்டமாக 118 கோடி ரூபாயை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. Speciale Invest ,Antares Ventures, Micelio Mobility, Redstart உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துள்ளன.

இந்த நிறுவனம் தயாரிக்க இருக்கும் விமானங்கள் செங்குத்தாக மேலே ஏறுவது மற்றும் தரை இறங்குவது போன்ற தொழில்நுட்பங்களில் இயங்க இருக்கிறது. இந்த 118 கோடி ரூபாய் பணத்தை கொண்டு சர்வதேச அளவிலான கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து விமான போக்குவரத்துக்கான சான்றிதழ்களை பெறவும், வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்யவும் பயன்படுத்துவோம் என இ பிளேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைவரான சத்யா சக்கரவர்த்தி சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திடம் இருந்து விமான வடிவத்திற்கான ஒப்புதலை பெற்றிருப்பதாகவும் விமானத்திற்கான சான்றிதழ் பெறும் நடைமுறை தொடர்வதாகவும் கூறியுள்ளார். மேலும் சர்வதேச தரத்திலான தொழில்நுட்ப பரிசோதனை வசதிகளை பெறுவதற்கு தங்களுடைய இ பிளான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தற்போது விமானத்தை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு மத்தியில் இதன் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இது வெற்றி அடைந்தால் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து எளிதாகிவிடும். இந்த ஏர் டாக்ஸி விமானங்கள் ஒரு விமானியோடு நான்கு பயணிகள் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்படுவதாகவும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே பெங்களூருவில் விமான நிலையத்துக்கும் நகரத்திற்கும் இடையிலான போக்குவரத்தை எளிமைப்படுத்த ஏர் டாக்ஸி சேவை கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது சென்னையிலும் ஒரு நிறுவனம் ஏர் டாக்ஸிகளை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications