சென்னையின் 2வது விமான நிலையத்திற்கான கனவு மீண்டும் தள்ளிப்போகிறது, விஜய் தலைமையிலான அரசு பலக்கட்ட ஒப்புதல்களை பெற்ற பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முழுமையாகவும், மொத்தமாகவும் ரத்து செய்துள்ள நிலையில் சென்னையின் விமான பயணிகள் எண்ணிக்கை பெரிய முன்னேற்றம் இல்லாமல் தத்தளிக்கிறது.
இதேவேளையில் 2வது விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் தலைமையிலான அரசு தேட துவங்கியிருந்தாலும், இத்திட்டத்திற்கான ஒப்புதல் பெற குறைந்தது 5 வருடம் ஆகும் என கணக்கிடப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு நாட்டின் வளர்ச்சியை கணக்கிட எப்படி எரிபொருள் மற்றும் மின்சார நுகர்வு முக்கிய அளவு கோளாக உள்ளதோ, அதேபோல் ஒரு நகரின் வளர்ச்சியை கணக்கிட போக்குவரத்து முக்கியமான அளவுகோளாக உள்ளது.
அப்படி பார்க்கையில் இந்தியாவிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் நகரங்கள் பட்டியலில் (2020-2025 வரையிலான காலக்கட்டம்) தமிழ்நாட்டின் பொருளாதாரம் 14.92 சதவீதம் CAGR அளவீட்டுடன் பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு...
விமான போக்குவரத்து கொண்ட நகரங்களில் 5வது இடத்திற்து தள்ளப்பட்டு ஹைத்ரபாத், பெங்களூர் ஆகியவை தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
சென்னை விமான நிலையம் ஜூலை மாத தரவுகள் படி இந்தியாவின் அதிக பயணிகள் பயன்படுத்தும் விமான நிலையங்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
ஜூன் 2026-ல் சென்னை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச + உள்நாட்டு பயணிகள் சேர்த்து 16,78,544 பேர் பயணம் செய்துள்ளனர். இது ஜூலை 2026-ல் இந்த எண்ணிக்கை 16,49,501 ஆக குறைந்துள்ளது. அதாவது, ஒரே மாதத்தில் சென்னை விமான நிலையத்தின் மொத்த பயணிகள் எண்ணிக்கை 29,043 பேர் குறைந்துள்ளது. இதன் மூலம் சென்னை விமான நிலையத்தின் மொத்த பயணிகள் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 1.73% சரிந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை குறைந்தாலும் வெளிநாட்டுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை என்பது 3,88,840ல் இருந்து ஜூலை மாதத்தில் 4,46,743 ஆக உயர்ந்து சுமார் 14.9 சதவீத மாதாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் Top 10 சர்வதேச பயணிகள் விமான நிலையங்களில் சென்னை 6-வது இடத்தில் உள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாத தரவுகளை பார்க்கும் போது சர்வதேச பயணிகள் 14.9% உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டு பயணிகள் 3% குறைந்துள்ளனர்.
சமீபத்தில் தான் விஜய் தலைமையிலான அரசு விமான எரிபொருள் மீது விதிக்கப்படும் 29 சதவீத வரியை குறைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட் அறிவிப்பிலேயே எதிர்பார்த்த நிலையில் இதுவரையில் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications