தென்னிந்தியாவில் முக்கிய விமான நிலையமாக இருக்கும் சென்னை விமான நிலையம் கடந்த 5 வருடத்தில் பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்து வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு நேரடி விமானச் சேவையை அதிகரிக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது. இதற்காகச் சென்னை விமான நிலையத்தில் புதிய முனையங்களின் கட்டுமானம் முழு வேகத்தில் நடந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து உலக நாடுகளில் இருந்து அதிகப்படியான முதலீடுகளை ஈர்த்துப் பல தொழிற்சாலைகளையும், நிறுவனங்களை ஈர்த்து வரும் வேளையில் மாநிலத்தின் போக்குவரத்து வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

இதில் முக்கியமாக விமானச் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது, ஏற்கனவே சென்னை, கோவை விமான நிலையத்தை மேம்படுத்தி வரும் வேளையில் சேவை இல்லாமல் முடங்கிப்போன சேலம் விமான நிலையமும் தற்போது புதிய சேவைகள் உடன் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் கொங்கு மண்டலத்தில் இரு விமான நிலையங்கள் மூலம் இரு முனைகளையும் இணைக்கிறது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் சமீபத்தில் கட்டுமான பணிகளும், சோதனைகளும் முடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்த டெர்மினல் டி4 தற்போது முழு உள்நாட்டு விமான முனையமாக மாறியுள்ளது. ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர் விமானங்கள் நவம்பர் 15 ஆம் தேதி முதல் டெர்மினல் டி4 முழுமையாக இயங்க உள்ளது.
ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர் விமானங்களின் செயல்பாடுகள் டி4 டெர்மினலில் இயல்பாக இயங்க துவங்கிய பின்பு டாடா குழுமத்தின் கீழ இயங்கும் மற்றொரு பிராண்டான விஸ்தாரா விமானங்களும் இதிலிருந்து இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பெங்களூரில் விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த டி2 டெர்மினலில் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மட்டும் புதுப்பொலிவுடன் இயங்கி பெங்களூர் விமானப் பயணிகளை அசத்தி வருகிறது. கிட்டதட்ட இதேபோன்ற கட்டமைப்பில் சென்னை விமான நிலையத்தில் டி4 டெர்மினல் மாறுகிறது.


Click it and Unblock the Notifications