ஒன்றுக்கும் உதவாதது என்று ஒதுக்கப்படும் பல பொருட்களில் பல உபயோகமான விஷயங்கள் இருக்கின்றன. வெறும் குப்பை என்று கூறி காசு கொடுத்து அகற்றச் சொன்ன தென்னை மட்டைகள் இன்றைக்கு பல கோடி ரூபாய் வருமானத்தைத் தருகிறது.
கோகோ பீட்டை நிலத்தில் கலந்து விட்டால் மண்ணின் வளம் பெருகும்.
90 களின் பிற்பகுதி வரை, இந்த தென்னை நாரின் மகத்துவம் இங்குள்ள யாருக்கும் தெரியவில்லை.

கோகோ பீட்டின் பயன்பாட்டை முதலில் கண்டறிந்தவர்கள் டச்சுக்காரர்கள். அதன்பின் இது கேரளம், தமிழ்நாட்டுக்குள் வந்தது.
இப்போது சென்னையில் ஒருவர் தேங்காய் நாரை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்!
சென்னையைச் சேர்ந்த குளோபல் கிரீன் காயர் நிறுவனர் அனீஸ் அகமது. இந்த நாரை வைத்து சிறப்பான வர்த்தக தொடர்புகள் மூலம் ஏற்றுமதியில பெரும் வரத்தகத்தையும், வருமானத்தையும் பெற்று வருகிறார். ஆண்டுக்கு ரூ.75 கோடி வருவாய் கொண்ட இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு கோகோ பீட்டை ஏற்றுமதி செய்கிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் கோகோ பீட் உற்பத்தியில் மிகப்பெரிய சப்ளையர் மற்றும் உற்பத்தியாளர் என்ற நிலைக்கு அனீஸ் அகமது கொண்டு வந்துள்ளார்.
இது பற்றி அனீஸ் அகமது கூறுகையில், வெறும் குப்பையாக நினைக்கப்பட்ட இந்த கோகோ பீட்டின் சந்தை முக்கியமாக சர்வதேச அளவில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மண் வளம் குறைவாக இருப்பதால் இந்த கோகோ பீட்டுக்கு அங்கு நிறைய டிமாண்டு உள்ளது.
எங்களது குளோபல் க்ரீன் கயர் நிறுவனம் கோகோ பீட்டை ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல், அதில் ஊட்டச்சத்துக்களைக் கலந்து அதன் தயாரிப்புகளையும் தனிப்பயனாக்குகிறது. முதலில் தென்னை மட்டையைச் சேகரித்து, அதில் உள்ள இலைகள், நார்கள், பிற கழிவுகள் போன்ற அசுத்தங்களை அகற்றி சுத்தம் செய்கிறது.
தேங்காய் நாரில் அதிகளவு மண் இருப்பதால் அதை நீக்க தண்ணீரில் நன்றாக துவைத்து எடுக்கப்படுகிறது. பின்னர் அது பிளாக்குகள், டிஸ்க்குகளாக மாற்றப்படுகிறது. கோகோ பீட் அல்லது தேங்காய் உமி என்று அழைக்கப்படும் தேங்காய் நார், வீட்டுக் கதவு, பிரஷ்கள், கயிறு, துகள் பலகை மற்றும் ஸ்டாண்டர்டு பேக்கிங் பொருள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது மெத்தைகள் மற்றும் தரை ஓடுகளில் கூட பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய் உமியில் 30% நார்ச்சத்து, 70% பீட் உள்ளது. இதில் அதிக லிக்னின் மற்றும் பீனாலிக் அடங்கியுள்ளது. அதிக லிக்னின் இருப்பு காரணமாக, தேங்காய் நார் மிகவும் நெகிழ்வாக உள்ளது.
அதிகம் உழைக்கக்கூடியது. அத்துடன் பொருட்கள் அழுகுவதை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது.
தென்னை மட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த தேங்காய் நார்கள் ஒரு நடவு ஊடகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது தாவரத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது என்றார் அனீஸ் அகமது.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications