இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி எந்தக் காஸ்ட்லியான கார் அறிமுகமானாலும், உடனே வாங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் அவருக்குப் போட்டியாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை அவருக்கு முன்னதாக ஒருவர் வாங்கி அசத்தியுள்ளார்.
இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதற்கு முன்பே, தமிழ்நாட்டில் பிரபல தொழிலதிபர் புதிய கார்-ஐ வாங்கியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பே ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார் இந்தியாவில் சிலருக்கு மட்டுமே டெலிவரி செய்யப்படும் செய்தி வெளியானது. ஆடம்பரமான உலகின் உச்சமாகப் பார்க்கப்படும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு தான் இந்த ஸ்பெக்டர். பல மாற்றங்களையும், புதிய புரட்சியின் அடையாளமாக விளங்கும் ஸ்பெக்டர் காரை சென்னையில் ஒருவர் வாங்கியுள்ள செய்தி பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், சென்னையைச் சேர்ந்த உள்கட்டமைப்பு கட்டுமான நிறுவனமான பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் பாஷ்யம் யுவராஜ் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை டெலிவரி எடுத்து, இந்தச் சிறப்புமிக்கக் காரை வாங்கிய முதல் தமிழன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் என்பது பிரிட்டிஷ் சொகுசு பிராண்டின் முதல் எலக்ட்ரிக் வாகனமாகும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.9 கோடி ரூபாய், ஆன் ரோடு விலை சுமார் 10.5 கோடி ரூபாயாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார் இந்நிறுவனத்தின் முந்தைய வெளியீடான பாண்டம் காரின் அப்கிரேடெட் வெர்ஷனாகப் பார்க்கப்பட்டாலும், பல புதுமைகள் இதில் உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் முதல் முறையாக எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்திருந்தாலும் அதன் பாரம்பரியமான வடிவமைப்பு, ஆடம்பரம் ஆகியவற்றைச் சற்றும் குறையாமல் பார்த்துக்கொண்டது.
சுமார் 3 டன் எடை கொண்ட இந்தக் கார் ஓட்டும் போது பூ போல் திருப்பும் அளவில் ஸ்டியரிங் வீல் இருக்கும், ஒரு விரலில் ஸ்டியரிங் வீல் திரும்பக் கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. காரின் எடை அதிகமாக இருந்தாலும் 593PS மற்றும் 900NM திறன் வெளிப்படுத்தக் கூடியது இந்த ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் என்பதால் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 520 கிலோமீட்டர் வரையில் பயணிக்க முடியும். மேலும் 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.5 நொடியில் தொடக்கூடிய திறன் கொண்டது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications