இந்தியாவின் மிகவும் பழமையான நிறுவனங்களில் ஒன்று சென்னையில் இன்னமும் சிறப்பாக இயங்கி வருவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
Burgundy Private Hurun India இணைந்து வெளியிட்ட இந்தியாவின் டாப் 500 மதிப்புத்தக்க தனியார் நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டது.
பழமையான நிறுவனங்கள்
இந்த அறிக்கையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களைப் பல வகையில் பட்டியலிடப்பட்ட நிலையில், அதிக மதிப்புடைய பழமையான நிறுவனங்களின் டாப் 10 பட்டியலில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 200 வருடங்களுக்கு அதிகமாக இயங்கி வரும் EID PARRY நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சென்னை
1788 ல் பிரிட்டன் நாட்டின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த தாமஸ் பாரி என்பவர் EID PARRY நிறுவனத்தைச் சென்னையில் துவங்கினார். இந்தியாவைப் பிரிட்டிஷ் கைப்பற்றுவதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் EID PARRY நிறுவனம்.
EID PARRY நிறுவனம்
Burgundy Private Hurun India இணைந்து வெளியிட்ட 2022 ஆம் ஆண்டுக்கான அதிக மதிப்புடைய நிறுவனங்கள் பட்டியலில் 234 ஆண்டுப் பழமையாகச் சர்க்கரை மற்றும் ஊட்டச்சத்து மருந்து தயாரிப்பாளர் EID பாரி நிறுவனம் சுமார் 10,987 கோடி ரூபாய் மதிப்புடன் இடம்பெற்றுள்ளது.
குளோபல்பீஸ் நிறுவனம்
இதே நேரத்தில் இந்த 2022 ஆண்டுக்கான 500 நிறுவனங்கள் பட்டியலில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட குளோபல்பீஸ் நிறுவனம் 9100 கோடி ரூபாய் மதிப்பீட்டைக் கொண்டு உள்ளது. இந்தப் பட்டியலில் youngest நிறுவனமாகப் பார்க்கப்படுகிறது.
டாப் 10 தொழிற்துறை குழுமங்கள்
இந்தப் பட்டியலில் சுமார் 25 நிறுவனங்கள் 100 வருடத்திற்கும் பழமையானவை. இந்தியாவில் காலம் காலமாக வர்த்தகச் சந்தையில் இருக்கும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் மிகவும் அதிகம். அப்படி, டாப் 10 தொழிற்துறை குழுமங்கள் Burgundy Private Hurun India 500 பட்டியலில் உள்ள 61 நிறுவனங்கள் வைத்துள்ளது.
மும்பை
இதில் முக்கியமாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 500 நிறுவனங்களில் டாடா குழுமம் 15 நிறுவனங்களையும், அதானி குரூப் 8 நிறுவனங்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா குரூப் 6 நிறுவனங்களை வைத்துள்ளது. மேலும் டாப் 10 தொழிற்துறை குழுமங்களில் 6 மும்பை நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
டாப் 10 பழமையான நிறுவனங்கள்
E.I.D Parry நிறுவனம் 1788 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று 10,987 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது.
பென்னட் கோல்மன் நிறுவனம் 1838 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று 7,400 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது.
காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனம் 1844 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று 7,718 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது.
பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் 1863 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று 6,093 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது.
ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனி நிறுவனம் 1865 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று 9,200 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது.
மும்பை பங்குச்சந்தை அமைப்பு 1875 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று 7,982 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது.
டாபர் இந்தியா நிறுவனம் 1884 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று 98,278 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது.
KRBL நிறுவனம் 1889 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று 9,398 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது.
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1892 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று 90,724 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது.
கோத்ரேஜ் & பாய்ஸ் உற்பத்தி நிறுவனம் 1897 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று 22,600 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது.
செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் & இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1897 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று 9,563 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications