சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரேக்ஸ் இந்தியா நிறுவனம், ஓசூர் தொழிற்பேட்டை பகுதியில் புதிய தொழிற்சாலையை அமைத்து தனது உற்பத்தியை விரிவாக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஓசூர் அருகில் இருக்கும் சூளகிரி-யில் அமைக்கப்பட்டு வரும் 'பியூச்சர் மொபிலிட்டி பார்க்’ பகுதியில் 16.7 ஏக்கர் நிலத்தை இந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
ஓசூர் தமிழ்நாட்டின் ஆட்டோமோட்டிவ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கிளஸ்டராக உருவெடுத்திருக்கும் வேளையில் தமிழ்நாட்டில் 1962 முதல் இயங்கி வரும் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கம், ஆட்டோமொபைல் துறையில் உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் இந்நிறுவனத்திற்கு இருக்கும் டிமாண்ட்-ஐ காட்டுகிறது.

பிரேக்ஸ் இந்தியா நிறுவனம், பல்வேறு பிரிவு வாகனங்களுக்கான பிரேக் சிஸ்டங்கள், கிளட்ச் மற்றும் இதர் ஓரிஜினல் ஆட்டோமொபைல் உதிரிபாங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. குறிப்பாக, கார்கள், டிரக்குகள், இரு சக்கர வாகனங்கள், டிராக்டர்கள், ரயில்கள், காற்றாலை டர்பைன்கள் ஆகியவற்றின் உதிர்பாகங்களை இந்நிறுவனம் தயாரிப்பதில் கில்லி.
தமிழ்நాட்டில், சென்னை மற்றும் வேலூரில் உள்ளிட்ட 21 இடங்களில் Brakes India நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த உற்பத்தி ஆலைகளில் 10000த்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு பணி மற்றும் 860 மில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை பெற்று வருகிறது. இதுமட்டும் அல்லாமல் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்திடம் 2 லட்சம் டன் இரும்பு கேஸ்டிங் தளத்தை கொண்டு உள்ளது. பல்வேறு வகையான வாகன உற்பத்தியாளர்களுக்கு
பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் தற்போது TSF குரூப் கீழ் இயங்கி வருகிறது, இந்த TSF குரூப் 1911 முதல் ஆட்டோமோட்டிவ் முதல் நிதியியல் தேவை வரையில் பல துறையில் இயங்கி வருகிறது. 1962 ஆம் ஆண்டு டிவி சுந்தரம் & சன்ஸ் மற்றும் பிரிட்டந் லுகாஸ் இண்டஸ்ட்ரீஸ் மத்தியிலான கூட்டணியில் உருவானது தான் இந்த பிரேக்ஸ் இந்தியா.
பிரேக்ஸ் இந்தியா தயாரிக்கும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உலகில் 35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் OEM சந்தையில் சுமார் 60 சதவீச சந்தையை பிரேக்ஸ் இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த நிலையில் ஓசூர்-க்கு வரும் இந்த பிரேக்ஸ் இந்தியா இந்திய ஆட்டோமொபைல் துறையில் புதிய சந்தையை கைப்பற்ற உள்ளதாக தெரிகிறது.
ஓசூர்- சூளகிரி பகுதியில் தான் ஓலா, ஏதர் ஆகிய இரு பெரிய எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தொழிற்சாலைகள் இருக்கும் வேளையில், பிரேக்ஸ் இந்தியாவின் தொழிற்சாலை இப்பகுதிக்கு வருவது மூலம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிப்பில் கவனம் செலுத்தவும் அமைக்கப்பட்டு இருக்கலாம்.
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications