இந்தியாவில் உருவான பல நிறுவனங்கள் உலகளவில் முன்னேறி இருந்தாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் முன்னேறும் போது தனிச் சந்தோஷம் தான், இப்படித் தான் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் பிரஷ்வொர்க்ஸ் (Freshworks) நிறுவனம் புதிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளது.
ஆம், சென்னையில் இருந்துகொண்டு அமெரிக்காவின் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்துடன் போட்டிப்போடும் நிறுவனம் அமெரிக்காவில் ஐபிஓ வெளியிடுவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், நாஸ்டாக் ஐபிஓ-வில் தற்போது மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
சென்னை Freshworks நிறுவனம்
அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள Freshworks 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஒரு பங்கு விலை 36 டாலர் விலையில் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பில் பட்டியலிடப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் முதல் நாளிலேயே 22 சதவீதம் வரையிலான வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில் ஒரு பங்கு விலை 48 டாலர் வரையில் உயர்ந்து மொத்த நிறுவனத்தின் மதிப்பு 12.2 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
கிரிஷ் மாத்ருபூதம்
இந்த வெற்றியின் மூலம் கிரிஷ் மாத்ருபூதம் தலைமையிலான Freshworks நிறுவனத்தில் பணியாற்றும் 500 ஊழியர்கள் கோடீஸ்வரனாக உயர்ந்துள்ளனர். பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றும் போது முக்கியப் பதவி மற்றும் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு ESOP வழங்கும் இதன் மூலம் ஊழியர்கள் நிறுவனத்தின் பங்குகளைப் பெறுவார்கள்.
500 கோடீஸ்வரர்கள்
Freshworks நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் காரணத்தால் அந்தப் பங்குகளின் மதிப்பின் படி தற்போது Freshworks நிறுவனத்தின் 500க்கும் அதிகமான ஊழியர்கள் கோடீஸ்வரர் ஆக உயர்ந்துள்ளனர். இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால் சுமார் 69 பேர் 30 வயதிற்கும் குறைவானவர்கள்.
76 சதவீதம் ஊழியர்கள் கையில் பங்குகள்
இதுகுறித்து கிரிஷ் மாத்ருபூதம் கூறுகையில் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 76 சதவீதம் பேர் நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ளனர். இந்த எண்ணிக்கை 90 சதவீதமாக உயர்ந்திருக்கும், ஆனால் சமீபத்தில் வர்த்தக விரிவாக்கத்திற்காக அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்திய காரணத்தால் இதன் அளவீடு 76 சதவீதமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
வாழ்நாள் கனவு
இதுக்குறித்து கிரிஷ் மாத்ருபூதம் தனது டிவிட்டரில், என்னுடை வாழ்நாள் கனவு நினைவாகியுள்ளது. திருச்சியில் துவங்கிய என் வாழ்க்கையில் தற்போது Freshworks ஐபிஓ-வை துவக்கி வைப்பதற்காக அமெரிக்காவின் NASDAQ -ல் மணி அடிக்கிறேன். என்னுடைய ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், கூட்டணி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு மிகப்பெரிய நன்றி என டிவீட் செய்துள்ளார்.
மேக்ஆப்ஸ்டூடியோ தலைவர் சுரேஷ்
இதற்கு சென்னையில் மிகவும் பிரபலமான மேக்ஆப்ஸ்டூடியோ தலைவர் சுரேஷ் குமார், கிரிஷ் மாத்ருபூதம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவரது டிவீட்டில், "தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்!! தமிழின் பெருமை உலகறியட்டும்.. வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ். சிறப்பான தரமான சம்பவம் ... அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் இது மிகப்பெரிய கனவு, அதை பார்க்கும் போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications