எல்லாம் ஒரு விளம்பரம் தான்!! கவனம் ஈர்க்கும் சென்னை நிறுவனத்தின் விளம்பர பதாகை..!!

விளம்பரங்கள் தான் ஒரு நிறுவனத்தையும் அதன் தயாரிப்புகளையும் மக்களிடையே கொண்டு சேர்க்கக்கூடிய மிக முக்கியமான ஒரு ஊடகம். முதன் முதலில் நாம் ஒரு பொருளை அறிமுகம் செய்கிறோம் எனும் போது அதற்கான விளம்பரம் கிளிக் ஆகிவிட்டால் அந்த விளம்பரத்தின் வாயிலாகவே கோடிக்கணக்கான மக்களை அந்த பொருள் சென்று சேர்ந்துவிடும்.

நிறுவனங்கள் விளம்பரங்களில் குறிப்பாக கிரியேட்டிவ்வான விளம்பரங்களுக்கு அதிக அளவில் செலவு செய்கின்றன. அதுவும் தற்போது இந்தியா போன்ற ஒரு நாட்டில் அனைத்து வயதினரையும் கவர வேண்டும் என்றால் புதுமையான முறையில் விளம்பரங்கள் செய்தால் தான் அது சாத்தியமாகிறது. அப்படி சென்னையில் சென்னை நிறுவனம் தனித்துவமான முறையில் வைத்திருக்கக் கூடிய விளம்பர பதாகைகள் பேசு பொருளாக மாறி இருக்கின்றன.

எல்லாம் ஒரு விளம்பரம் தான்!! கவனம் ஈர்க்கும் சென்னை நிறுவனத்தின் விளம்பர பதாகை..!!

சென்னையை தலைமை இடமாக கொண்டு ஆசனா (ASSANA Colorectal & Gut Wellness Clinic) என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பெருங்குடல் மற்றும் குடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளை இந்த மருத்துவமனை வழங்குகிறது. இங்கே குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வாழ்க்கை முறை மாற்றங்களையும் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் தங்களுடைய சேவைகளை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என்பதற்காக தனித்துவமான முறையில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் விளம்பர பதாகைகளை வைத்திருக்கிறது.

சென்னையை சேர்ந்த Be Positive 24 என்ற நிறுவனத்தோடு இணைந்து ஆசனா நிறுவனம் இந்த விளம்பர பதாகைகளை தயாரித்திருக்கிறது. இந்த நிறுவனம் என்ன சேவைகளை வழங்குகிறது என்பதை வெளிப்படையாகவும் அதே வேளையில் எளிதாக மக்களை சென்றடையும் வார்த்தைகளை பயன்படுத்தியும் விளம்பரம் செய்திருக்கின்றனர். மிக புத்திசாலித்தனமான முறையில் வார்த்தைகளை பயன்படுத்தி இந்த விளம்பர பதாகைகளை அவர்கள் வடிவமைப்பு செய்துள்ளனர்.

எளிதாக மக்களிடம் சென்று சேர்க்கும் வகையிலான ஆங்கில வார்த்தைகளை விளம்பரங்களில் பயன்படுத்தி இருக்கின்றனர். The number one clinic for your number two problems, The truth about life is that sh*t happens every day. Talk to us if it doesn't உள்ளிட்டவை பலரது கவனத்தையும் பெற்றுள்ளன. பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இந்த விளம்பரம் வித்தியாசமாக இருக்கிறது என்பன உள்ளிட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர் . பொதுவாக இது போன்ற விஷயங்களை வெளிப்படையாக பேசுவதற்கு தயங்குவார்கள், ஆனால் அதை எல்லாம் உடைத்து இப்படி ஒரு புதுமையான மார்க்கெட்டிங் முறையை இவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+