ஒவ்வொறு வருடமும் வருடாந்திர சம்பள உயர்வை வாங்குவதற்கு மேனேஜர் உடன் குழாயடி சண்டை போடும் ஊழியர்களுக்கு இந்த விஷயம் சற்று சோகமானதாக தான் இருக்கும். குறிப்பாக ஐடி துறையில் இந்த வருடம் சம்பள உயர்வு வாங்காத பலருக்கு இந்த செய்தி புலம்ப வைக்கலாம்.
ஐடியாஸ்2ஐடி நிறுவனம் 2022ல் தனது ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக அவர்களது சொந்த பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். இன்னும் பலருக்கு ஊழியர்கள் சிரித்த முகத்துடன் தங்களது குடும்பத்துடன் கார் ஓட்டி சென்று மறக்க முடியாது.

இதை தொடர்ந்து ஐடியாஸ்2ஐடி நிறுவனம் மீண்டும் தனது ஊழியர்களுக்கு புது கார் கொடுத்து வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐடியாஸ்2ஐடி நிறுவனத்தில் 5 வருடத்திற்கும் அதிகமான காலம் பணியாற்றிய 50 ஊழியர்களுக்கு 8 முதல் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புத்தம் புதிய கார் பரிசாக அளிக்கப்பட்டு உள்ளது. இதைவிட பெரிய கிஃப்ட்-ஐயும் ஐடியாஸ்2ஐடி நிறுவனம் கொடுத்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் ஐடியாஸ்2ஐடி தொழில்நுட்ப நிறுவனம் சமீபத்தில் 100 மில்லியன் டாலர் மதிப்பீட்டை தொட்ட நிலையில் இதை கொண்டாடும் வகையில் நிறுவனத்தின் மொத்த பங்கில் மூன்றில் 1 பங்கை ஊழியர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

இதுக்குறித்து சென்னை ஐடியாஸ்2ஐடி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் 33% பங்குகளை அதன் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஐடியாஸ்2ஐடி நிறுவனத்தின் 33% பங்குகளில், 5% பங்குகளை நிறுவனத்தில் அதன் தொடக்கத்திலிருந்து (2009 இல்) பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மீதமுள்ள 28 சதவீத பங்குகளை மீதமுள்ள 700 பணியாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு. இது தவிர, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஐடியாஸ்2ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய 50 ஊழியர்களுக்கு 50 கார்களையும் நிறுவனம் வழங்கியுள்ளது.

"2009 இல் துவங்கப்பட்ட ஐடியாஸ்2ஐடி நிறுவனம் தற்போது 100 மில்லியன் டாலர் நிறுவனமாக நாங்கள் வளர்ந்துள்ளோம், இதன் பலனை எங்கள் ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். எங்களுடைய வெல்த் ஷேரிங் முயற்சியின் ஒரு பகுதியாக மூன்றில் ஒரு பங்கை ஊழியர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்.
இந்தியா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ என மொத்தம் 750 பணியாளர்கள் உள்ளனர். எங்கள் நிறுவன ஊழியர்கள் தங்கள் விழிப்பு நேரத்தில் சுமார் 30-40 சதவீதத்தை நிறுவனத்திற்காக செலவிடுகிறார்கள்.
உயர்ந்த இலக்குகள் மற்றும் மகிழ்ச்சியான பயணத்தை நாங்கள் நம்புகிறோம். இந்த யோசனை மூலம் ஊழியர்களின் பணி அனுபவத்தை மாற்றுவதற்கும், வலுவான கூட்டு நிறுவன கலாச்சாரம், நிறுவனத்துடன் உணர்ச்சி ரீதியான தொடர்பை உருவாக்குவதற்கும் முயற்சியாகவும் உள்ளது என்று ஐடியாஸ்2ஐடி நிறுவனர் முரளி விவேகானந்தன் கூறினார்.


Click it and Unblock the Notifications