சென்னையைத் தளமாகக் கொண்டு இயங்கிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான கமாச்சி இண்டஸ்ட்ரீஸ் திவாலாகிய நிலையில், இந்நிறுவனத்திற்குத் தீர்வு காண முயற்சி செய்யப்பட்ட நிலையில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இறுதி தீர்வாக ஏலம் விட முடிவு செய்யப்பட்டு.
இந்த நிலையில் சென்னை கமாச்சி இண்டஸ்ட்ரீஸ் ஏலத்தில் அதிகத் தொகையைக் கொடுத்த ஜெய்கார்ப் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஜெய்கார்ப் நிறுவனத்தின் துணைத் தலைவர் வீரேந்திர ஜெயின் மற்றும் அவரது மகன் அங்கித் ஜெயின் ஆகியோரின் ஏல விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

கமாச்சி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தீர்வு காணும் பணியை 2020 ஆம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் 2020ல் அதிகாரப்பூர்வமாக எஸ்பிஐ துவங்கியது. இந்த முயற்சியின் இறுதியில் NCLT இறுதியில் வழிகாட்டுதல் கீழ் ஜெய்கார்ப் நிறுவனம் 487 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கொடுத்து கைப்பற்றியுள்ளது.
கமாச்சி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சுமார் 5 வங்கிகளிடம் சுமார் 2,200 கோடி ரூபாய் அளவிலான கடன் பெற்று திவாலாகியுள்ளது. இந்த நிறுவனம் கட்டுமானங்களில் பயன்படுத்தும் டிஎம்டி பார்களைத் தயாரித்து வருகிறது.

கமாச்சி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் ஸ்பான்ஞ் இரும்பு பிரிவில் ரோலிங் மில் மற்றும் ஸ்டீல் உருக்காலை பிரிவும் கொண்ட இணைக்கப்பட்ட தொழிற்சாலையைக் கொண்டு உள்ளது. இந்தத் தொழிற்சாலை கைப்பற்றுவதற்காக நிதியை அடுத்த 30 நாட்களுக்குள் செலுத்தி NCLT ஒப்புதல் பெற உள்ளது.
ஜெய்கார்ப் நிறுவனம் Rolta India நிறுவனத்தைக் கைப்பற்றவும் ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது. இந்த நிறுவனத்தைத் தான் தற்போது பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி நிறுவனம் கைப்பற்றுவதற்காகப் பெரும் தொகையை அளிப்பதாக ஏல முடிவுக்குப் பின்பு அறிவித்து மும்பை என்சிஎல்டி பென்ச்சில் முறையிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications