சென்னை: புதிய தேடல், விடா முயற்சி ஆகியவை இருந்தால் தொழில் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதற்கு உதாரணமான நபர் தான் இவர். கைநிறைய பணம் வந்துவிட்டால் அதனை ஏழை மக்களுக்கு வழங்கி உதவ வேண்டும் என்பதற்கும் உதாரணமாக இருக்கிறார் இவர்.
அருண் ஜெயின், மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் கொண்டவர். டெல்லி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் படிப்பை முடித்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

இந்தியாவில் இந்தியர்களுக்கான மென்பொருளை உருவாக்க வேண்டும் என முடிவு செய்த இவர் தன்னுடைய மூன்று நண்பர்களோடு இணைந்து 20,000 ரூபாய் முதலீட்டில் 1983 ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (international information system) என்ற பெயரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கினார்.
தொழில்களுக்கு தேவையான மென்பொருள் சம்பந்தப்பட்ட தீர்வுகளை வழங்குவது தான் இவரது நிறுவனத்தின் நோக்கம். பின்னர் 1986 ஆம் ஆண்டு இவரது நிறுவனம் நியூக்ளியஸ் சாஃப்ட்வேர் ஒர்க் ஷாப் பிரைவேட் லிமிடெட் (Nucleus Software Workshop Pvt Ltd) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து நிறுவனத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் புதிய பாதையில் சிந்திக்க தொடங்கினார். வங்கி மற்றும் நிதி சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் மென்பொருள் சம்பந்தப்பட்ட தீர்வுகளை வழங்க வேண்டும் என முடிவு செய்தார்.
இதற்காக 10,000 ரூபாய் முதலீட்டில் 1993ஆம் ஆண்டு சென்னையில் போலாரிஸ் சாப்ட்வேர் லேப் (Polaris Software Lab) என்ற நிறுவனத்தை தொடங்கினார். 120 பேருடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னாளில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.
வங்கிகளுக்கு தேவையான பல்வேறு மென்பொருள் தீர்வுகளை இது வழங்கியது. அமெரிக்கா, சவுதி உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் போலாரிஸ் சாப்ட்வேர் நிறுவனத்தில் சேவை பெற தொடங்கின. இதனை அடுத்து சிட்டி பேங்க் நிறுவனம் போலாரிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறியது. இதுதான் இந்த நிறுவனத்தின் வருமானத்தை உயர்த்தியது.
1999 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்து 900 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்தது. அடுத்த ஏழு ஆண்டுகளிலேயே இந்த நிறுவனம் நிறுவனத்தின் மதிப்பு 105 சதவீதம் என அதிகரித்தது. பின்னர் சிட்டி பேங்க் இந்தியாவின் மென்பொருள் தொழிலான ஆர்பிடெக் நிறுவனத்தை வாங்கியது. கிட்டத்தட்ட 2700 கோடி ரூபாய் மதிப்பிற்கு இந்த பரிவர்த்தனை நிகழ்ந்தது. 2014 ஆம் ஆண்டில் இவர் நிறுவனத்தின் பெயரை Intellect Designs Arena என மாற்றினார்.
தற்போது இந்த நிறுவனம் 240 வாடிக்கையாளர்களை கொண்டு 91 நாடுகளில் சேவையாற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் சுமார் 2,500 கோடி ரூபாய் ஆகும், லாபம் 548 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. உலகின் முன்னணி வங்கிகள் இந்த நிறுவனத்திடம் இருந்துதான் ஐடி சேவைகளை பெறுகின்றன.
நிறுவனத்தின் மதிப்பு 13 ,619 கோடி என உயர்ந்திருக்கிறது. தன்னுடைய வருமானத்தில் மக்கள் நலப் பணிகளுக்காக செலவிட்டு வருகிறார். கடந்த 26 ஆண்டுகளாக இவர் 114 மாவட்டங்களை சேர்ந்த 1500 பள்ளிகளில் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கட்டணங்களை செலுத்தி வருகிறார்.
Story written by: Devika
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications