இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த பைக் பிராண்டான ராயல் என்ஃபீல்டு இங்கிலாந்து பிரண்டாக இருந்தாலும், 1900 முதல் சென்னையில் உற்பத்தி தளத்தை வைத்து உற்பத்தி செய்து வரும் காரணத்தால் இன்றும் பலர் இதை இந்திய பிரண்டாகவே பார்க்கின்றனர்.
எய்ச்சர் மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் ராயல் என்ஃபீல்டு நடப்பு நிதியாண்டில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து தனது முதல் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

2023ஆம் நிதியாண்டில் மொத்த விற்பனையில் சுமார் 10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்த நிலையில், மிட்-வெயிட் பைக் சந்தையில் அதிகப்படியான வர்த்தகத்தை பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சமீபத்தில் ராயல் என்பீல்டு உயர்மட்ட நிர்வாகத்தில் பெரும் மாற்றமும், தடுமாற்றமும் ஏற்பட்ட நிலையிலும், பிரச்சனை சமாளித்து அடுத்தது புதிய மாடல்களை அறிமுகம் செய்து மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் வர்த்தகத்தையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.
இதே நேரத்தில் இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தை எலக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பி வரும் வேளையில், ராயல் என்ஃபீல்டு இப்பிரிவில் இதுவரையில் எவ்விதமான முடிவையும் எடுக்காமல் இருந்த நிலையில் தான் 1,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து தனது முதல் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிர்வாகம், உற்பத்தி தளம் என அனைத்தும் ராயல் என்ஃபீல்டு சென்னையை மையமாக கொண்டே இயங்கி வரும் நிலையில், இப்புதிய எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் தொழிற்சாலையை சென்னையில் அமைக்க உள்ளது. மேலும் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பதற்கான பொருட்களை பட்டியலிட்டு தயாரிப்பாளர்களிடமும், சப்ளையர்களிடமும் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாக ராயல் என்ஃபீல்டு சிஇஓ பி கோவிந்தராஜன் மார்ச் காலாண்டு முடிவை வெளியிடும் போது தெரிவித்தார்.

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாயை தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய எலக்ட்ரிக் வாகனகளை அறிமுகப்படுத்தவும் முதலீடு செய்யப் போவதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதோடு இந்தியாவில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பை மேம்படுத்த வருடத்திற்கு 178,000 பேட்டரி பேக்-களை உருவாக்கும் அசெம்பிளி யூனிட்டை அமைக்கவும், தமிழ்நாடு முழுவதும் 100 EV சார்ஜிங் நிலையங்களை நிறுவும் திட்டத்திற்கும் இந்த முதலீட்டை பயன்படுத்த உள்ளது ஹூண்டாய்.
ஹூண்டாய் நிறுவனத்திற்கு போட்டியாக இந்தியாவின் மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி 2030 ஆம் ஆண்டுகுள் 45000 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் தனது உற்பத்தியை 40 லட்சமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது. மாருதி சுசூகி தற்போது புதிய தொழிற்சாலையை ஹரியானா-வில் கட்டி வருகிறது. மேலும் மாருதி சுசூகி suv மற்றும் எலக்ட்ரிக் கார்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தையும் முதலீடு செய்யவும் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications