மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருடாந்திர சம்பள உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் நிறுவனங்கள் அனைத்தும் பொருளாதார மந்த நிலை, வர்த்தக சரிவு ஆகிவற்றால் செலவின குறைப்பு நடவடிக்கையை முன் வைக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் செலவின குறைப்பு, மறுசீரமைப்பு நடவடிக்கை என எந்த நடவடிக்கையை நிறுவனம் எடுத்தாலும் அதில் முதல் விஷயமாக வருவது பணிநீக்கம் தான்.
அந்த வகையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் EdTech ஸ்டார்ட்அப் நிறுவனமான Skill-Lync பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டியும், தனது சென்னை, பெங்களூர், ஹைதரபாத் ஆப்ரேஷன்ஸ்-ஐ ஒருங்கிணைக்கும் காரணமாகவும் பல நூறு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனமான Skill-Lync-ன் இந்த பணிநீக்கத்தில் குறைந்தது 300 - 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படலாம் என கணிக்கப்படுகிறது. இந்த பணிநீக்க சுற்றில் Skill-Lync நிறுவனம் சேல்ஸ், மார்கெட்டிங், டெக் மற்றும் ஹெச்ஆர் அணிகளில் பணிநீக்கம் செய்ய உள்ளது. Skill-Lync நிறுவனம் இன்ஜினியரிங் மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்ளும் சேவையை வழங்கி வருகிறது.
Skill-Lync நிறுவனத்தில் தற்போது 30000த்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். Skill-Lync தளத்தில் இருக்கும் கோர்ஸ் அனைத்தும் உலகின் முன்னணி தொழிற்துறை முனைவர்கள் உருவாக்கியது. மேலும் இத்தளத்தில் இருக்கும் கோர்ஸ்-களை 300க்கும் அதிகமான Hiring நிறுவனங்கள் அங்கிரித்துள்ளது. கடந்த 2 வருடத்தில் Skill-Lync தளம் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தது.
ஏப்ரல் 2015ல் Skill-Lync நிறுவனத்தை தற்போது இந்நிறுவனத்தின் சிஇஓ-வான சூர்ய நாராயன் மற்றும் சிடிஓ-வாக இருக்கும் சாரங்கராஜன் வி ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கினர். இன்றைய இன்ஜினியரிங் கல்வி முறையில் தரமான, அனுபவம் அடிப்படையிலான கல்வி மாணவர்களுக்கு கிடைக்காமல் உள்ளதை கண்டறிந்து இந்த Skill-Lync நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.
சென்னையை சேர்ந்த Skill-Lync நிறுவனத்தில் தற்போது சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சுமார் 2000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் நிறுவனத்தின் பல மட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த பணிநீக்கம் அறிவிப்பு மூலம் சுமார் 300 முதல் 400 ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்க உள்ளனர். மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் நோட்டீஸ் காலத்திற்கு இணங்க severance pay அளிக்கப்பட உள்ளது.
More From GoodReturns

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications