சென்னை தலைமையிடமாக கொண்ட சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் (Surmount Logistics Solutions) தனது ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை பாராட்டும் வகையில் அசாதாரணமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஊழியர்களை பாராட்டு விதமாக, டாடா கார்கள், ராயல் என்ஃபீல்டு பைக்குகள் மற்றும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் உள்ளிட்டவற்றை சுமார் 20 முன்னணி ஊழியர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு குஜராத் வைர வியாபாரி தான் கார், வீடு என பரிசளிப்பார், ஆனால் சமீபத்தில் தமிழ்நாட்டில் பல நிறுவணங்கள் தங்கள் ஊழியர்கள் காஸ்ட்லி பரிசுகளை கொடுத்து வருகின்றனர்.

டாடா டயாகோ காரின் அடிப்படை மாடலான XE வகையின் விலை (டெல்லி ஷோரூம் விலை) ரூ.5 லட்சம் ஆகும். ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மோட்டார்சைக்கிளின் அடிப்படை மாடல் ரூ.1.98 லட்சம் (டெல்லி ஷோரூம் விலை) ஆகும். ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களின் அடிப்படை மாடலான STD வகை ரூ.76,684 (டெல்லி ஷோரூம் விலை) ஆகும்.
சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் ஊழியர் நலன் மற்றும் ஊக்குவிக்கும் பொருட்டு இந்த காஸ்ட்லியான கிப்ட்களை கொடுத்து வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டென்சில் ரேயன் கூறுகையில், இத்தகைய முயற்சிகள் ஊழியரை உற்சாகப்படுத்துவதுடன், நிறுவனத்திற்கும், ஊழியர்களக்கும் மத்தியிலான உறவு, நம்பிக்கை அதிகரிக்கும். மேலும் உற்பத்தித்திறன் மற்றும் ஊழியர் தக்கவைப்பையும் மேம்படுத்தும் என்றார்.
ஊழியர்களுக்கு வாகனங்களை பரிசாக வழங்குவது என்பது புதிய போக்கு அல்ல. இந்தியா முழுவதும் பல நிறுவனங்கள் இத்தகைய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன. உதாரணமாக, ஹரியானாவை சேர்ந்த ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனம், சிறந்து செயல்பட்ட 15 ஊழியர்களுக்கு எஸ்யூவி கார்களை தீபாவளி போனஸ்ஸாக வழங்கியது.
இதேபோல், சென்னை தலைமையிடமாக கொண்ட கட்டமைப்பு ஸ்டீல் டிசைன் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 28 கார்கள் மற்றும் 29 பைக்குகளை பரிசாக வழங்கியது, இதில் மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற ஆடம்பர பிராண்டுகளும் அடங்கும்.


Click it and Unblock the Notifications