இந்திய ரிசர்வ் வங்கியின் தொடர் கண்காணிப்பில் 4 வங்கி சிக்கியுள்ளது, விதிமுறைகளை மாறிய காரணத்திற்காக சென்னை வங்கி உட்பட 4 வங்கிக்கு சுமார் 44 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி பொதுத்துறை வங்கி, தனியர் வங்கி, NBFC என எவ்விதமான வித்தியாசமும் இல்லாமல் அனைத்து வங்கிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக 4 கூட்டுறவு வங்கிகள் மீது சுமார் 44 லட்சம் ரூபாய் அளவிலான தொகையை அபராதமாக விதித்துள்ளது.
இதில் முக்கியமாக சென்னையைச் சேர்ந்த தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கூட்டுறவு வங்கிக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, மீதமுள்எள 3 கூட்டுறவு வங்கிகள் சேர்த்து ரிசர்வ் வங்கி மொத்தம் ரூ.44 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இவ்வங்கி சென்னையில் சுமார் 117 வருடங்களாக இயங்கி வருகிறது.

தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி குறிப்பிட்ட காலத்திற்குள் Depositor Education and Awareness Fund-க்கு (DEAF) தகுதியான தொகையை மாற்றத் தவறியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் NABARD வங்கிக்கு ஒரு மோசடி குறித்து புகாரளிக்கத் தவறியது மற்றும் தாமதமாக புகாரளித்ததுள்ளது. இதற்காக தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கூட்டுறவு வங்கிக்கு (TNSC Bank) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
TNSC வங்கி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கூட்டுறவு வங்கி சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கூட்டுறவு வங்கி நிறுவனமாகும். இவ்வங்கி 1905 இல் நகர்ப்புற கூட்டுறவு வங்கியாக துவங்கப்பட்டது. இவ்வங்கி Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் இவ்வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு பாதுக்காப்பு அளிக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து பாம்பே மெர்க்கன்டைல் கூட்டுறவு வங்கி-யும் குறிப்பிட்ட காலத்திற்குள் Depositor Education and Awareness Fund-க்கு (DEAF) தகுதியான தொகையை மாற்றத் தவறியதால் ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புனேவில் உள்ள ஜனதா சககாரி வங்கி, 'டெபாசிட் மீதான வட்டி விகிதம்' குறித்த ஆர்பிஐ வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிச்ரவ் வங்கி வெளியிட்ட தனிப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கண்காணிப்பில் சிக்கிய கடைசி வங்கியாக ராஜஸ்தானின் பரன் நகரிக் சகாரி வங்கி சில அடிப்படை விதிமுறைகளை மீறியதற்காக 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதங்கள் அனைத்தும் ஒழுங்குமுறை விதிமுறைகளில் வங்கிகள் இணங்காதது வாயிலாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த அபராதங்கள் எதுவும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் செய்துள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்திற்கு தொடர்புடையது இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications