சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும், உலகின் பல நாடுகளில் தனது இருசக்கர வாகனங்களை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான TVS மோட்டார் கம்பெனி லிமிடெட், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
ஜூன் காலாண்டில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 42.2 சதவீதம் உயர்ந்து 434.30 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ் 305.37 கோடி லாபம் ஈட்டியிருந்தது. இதுவே மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் 336.10 கோடி ரூபாய் பெற்றிருந்த நிலையில் ஜூன் காலாண்யில் 29.2% அதிகரித்துள்ளது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் 23.8% உயர்ந்து 9,055.51 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் மொத்த வருமானம் ₹7,347.83 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் டிவிஎஸ் நிறுவனம் எப்போதும் இல்லாத வகையில் ஜூன் காலாண்டில் அதிகப்படியான அப்ரேட்டிங் EBITDA அளவான 764 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டை காட்டிலும் 27 சதவீதம் அதிகமாகும். மேலும் EBITDA மார்ஜின் அளவு கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டை காட்டிலும் 10.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஜூன் 2022 காலாண்டை ஒப்பிடுகையில் ஜூன் 2023 காலாண்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரு சக்கர மற்றும் 3 சக்கர வாகன விற்பனை மற்கும் வெளிநாட்டு ஏற்றுமதி ஆகியவை 5 சதவீதம் அதிகரித்து 3 மாதத்தில் 9.07 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இக்காலக்கட்டத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து 4.63 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஸ்கூட்டர் விற்பனை 11 சதவீதம் அதிகரித்து 3.50 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 3 சக்கர வாகனங்களின் விற்பனை 46,000 இருந்து 35000 ஆக குறைந்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை ஜூன் 2022ல் வெறும் 9000 ஆக இருந்த நிலையில், தற்போது 39000 ஆக அதிகரித்துள்ளது. இன்றளவும் டிவிஎஸ் iQube என்படும் எலக்ட்ரிக் வாகனங்களின் புக்கிங் தொடர்ந்து குவிந்து வருவதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications