சென்னை: சென்னையை சேர்ந்த வா டெக் வாபாக் நிறுவனம் சவுதி அரேபியாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு 3250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இது தொடர்பாக வா டெக் வாபாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சவுதி அரேபியாவை சேர்ந்த அல் அகிர் என்விரான்மென்டல் சர்வீசஸ் நிறுவனத்துடன் தங்கள் நிறுவனம் 3251 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக கூறியுள்ளது.
இதன்படி சுயமாக செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டமைப்பது மற்றும் மேலாண்மை செய்வது உள்ளிட்ட பணிகளை தங்கள் நிறுவனம் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது. இதற்காக சவுதியை சேர்ந்த நிறுவனங்களோடு இணைந்து செயல்பட இருக்கிறோம் என தெரிவித்துள்ளது. இதன்படி வா டெக் வாபாக் நிறுவனம் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வடிவமைப்பது மற்றும் கட்டமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

கட்டுமான பணிக்கு தேவையான குழாய்களை நிறுவும் பணிகளை சவுதியை சேர்ந்த அல் கோவாரி நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது என தெரிவித்துள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியாவில் தங்களுடைய நிறுவனம் மிகப்பெரிய மைல்கல்லை எட்டி இருப்பதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். வா டெக் நிறுவனம் சவுதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாகவே பல்வேறு ப்ராஜெக்டுகளை கையாண்டு வருகிறது.
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய இந்த நிறுவனம் சவுதி அரேபியாவில் ஏற்கனவே சுமார் 30க்கும் மேற்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவி செயல்படுத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்த நிறுவனம் சவுதி நீர் ஆணையத்திடம் 2700 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றது.
திடீரென அது ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்த திட்டத்திற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு இருப்பதாகவும் தங்கள் நிறுவனம் மீண்டும் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வா டெக் வாபாக் வாபா நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு பிப்ரவரி 10ஆம் தேதி அன்று 1385 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 8,495 கோடி ரூபாய் ஆகும்.
2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 2900 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இதில் 250 கோடி ரூபாய் லாபம். இந்த நிறுவனத்தின் 59% பங்குகள் சில்லறை முதலீட்டாளர்கள் வசம் இருக்கிறது, புரோமோட்டர்கள் 19% பங்கையும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 18 % பங்குகளையும் வைத்திருக்கின்றன.
Story written by: Devika
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications