சென்னையை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் முன்னணி நிறுவனமான ZOHO சர்வதேச சந்தையில் தற்போது மிகவும் அவசியமான தனிநபர் தகவல்களை திருடாத ப்ரைவசி அடிப்படையிலான பிரவுசர்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
ChatGPT வந்த நாளில் இருந்து வெப் பிரவுசர் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாய் மற்றும் வர்த்தகத்தை கூகுள் நிறுவனத்திடம் இருந்து பறிக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் முயற்சி செய்து வரும் வேளையில் உலகம் முழுவதும் வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் கொண்டு உள்ள ZOHO அழகிய தமிழ் பெயரான உலா என்ற பெயரில் புதிய privacy-centered browser-ஐ அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் முதல் யூசி பிரவுசர் வரையில் வாடிக்கையாளர்கள் தரவுகளை வைத்து தான் விளம்பரத்தின் மூலம் வருவாய் பெற்று வருகிறது, இது பல இடத்தில் தவறாக பயன்படுகிறதா என்ற அச்சம் எல்லோருக்கும் உண்டு.
இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு நிறுவிய சென்னை நிறுவனமான ZOHO மிகவும் பிரத்தியேகமாக தனிநபர் தகவலை பாதுகாப்பது மட்டும் அல்லாமல் உலகளவில் டிராக்கிங் மற்றும் வெப்சைட் சர்வைலென்ஸ் செய்ய முடியாத கட்டமைப்புகள் உடன் உலா என்ற வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டு உள்ளது.
இப்புதிய வெப் பிரசவுசரான உலா குறித்து ஜோஹோ கார்ப்பரேஷனின் CEO மற்றும் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறுகையில் இன்று சந்தையில் உள்ள பல பிரவுசர்கள் பயனர் அதாவது மக்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்படவில்லை.
அவை அந்தந்த நிறுவனத்தின் விளம்பர அடிப்படையிலான வர்த்தக மாடல்கள் மற்றும் அவற்றைப் பூர்த்தி செய்யும் கண்காணிப்பு நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது. இது மக்களின் விருப்பங்களுக்கும் பிரவுசரின் வணிக மாதிரிகளுக்கும் இடையிலான முரண்பாடு என்று கூறியுள்ளார்.
ஜோஹோ கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள உலா பிரவுசரில் விளம்பரம் மற்றும் டேட்டா டிராக்கிங் பிளாக்கர்கள் இருக்கும் காரணத்தால் அனுமதியில்லாமல் வரும் புஷ் நோட்டிபிகேஷன், பாப் அப், டைம் டிராக்கிங் போன்றவை தடுக்கப்படும். இந்த பிளாக்கர்கள் இருக்கும் காரணத்தால் டார்கெட் விளம்பரங்கள், அடையாள திருட்டு, இதர ஆன்லைன் டிராக்கிங் மற்றும் கண்காணிப்புகள் குறையும்.

இதேபோல் இந்த உலா பிரவுசரை பயன்படுத்தும் போது கம்ப்யூட்டர் அல்லது wifi நெட்வொர்க்-ல் இருக்கும் பிற கருவிகளை தொடர்பு கொள்ள முடியாது. மேலும் இந்த ulaa பிரவுசர் அனைவருக்கும் இலவசம், தற்போது டெஸ்க்டாப் வெர்ஷன் தயாராக உள்ளது என்றும் ஆன்ட்ராய்டு மற்றும் ios வெர்சன் பீட்டா கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் இதை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோடு செய்துக்கொள்ள முடியும்.
ஜோஹோ கார்ப்பரேஷனின் புதிய உலா பிரவுசர் உடன் ChatGPT மூலம் இயங்கும் 13 generative AI ZOHO அப்ளிகேஷன் மற்றும் இன்டிகிரேஷன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் ZOHO தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications