சென்னை: இந்தியாவில் வீடு வாங்குவதற்கு உகந்த நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வீடுகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது போன்ற நகரங்களில் இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பினை வாங்குவதற்கு கூட 1 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவிலேயே வீடு வாங்குவதற்கு உகந்த நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. மேஜிக் பிரிக்ஸ் நிறுவனம் price-to-income ratio மற்றும் EMI-to-income ratio என்ற இரண்டு அளவீடுகளின் அடிப்படையில் இந்தியாவில் எந்த நகரம் வீடு வாங்குவதற்கு உகந்த நகரமாக இருக்கிறது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது . இதன்படி சென்னை, அகமதாபாத், கொல்கத்தா ஆகிய நகரங்கள் தான் 2024 ஆம் ஆண்டினை பொருத்தவரை வீடுகளை வாங்குவதற்கு உகந்த நகரமாக இருக்கிறது என தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, அகமதாபாத், கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களிலும் தங்கி இருந்து வேலை பார்ப்பவர்கள் அவர்களின் ஊதியத்திற்கு ஏற்ற வகையிலான வீடுகளை வாங்க முடியும். இதுவே மற்ற நகரங்களில் தங்கிப் பணி புரிபவர்களுக்கு அவர்களின் ஊதியத்தை விட பல மடங்கு அதிக மதிப்பு கொண்ட வீடுகளை தான் வாங்க முடிகிறது.
இந்த அறிக்கையானது கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் முழுவதும் சராசரியாக வீடுகளின் விலை 46 சதவீதம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கிறது. குறிப்பாக ஹைதராபாத் நகரத்தில் 78.6%, நொய்டாவில் 69 % அதிகரித்துள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையின்படி இந்தியாவின் முக்கியமான பத்து நகரங்களில் வீட்டு வருமானம் 2020 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஓராண்டுக்கு 5.4% ம் என உயர்ந்துள்ளது அதுவே சொத்துக்களின் விலை மதிப்பு ஓராண்டுக்கு 9.3% சதவீதம் என அதிகரித்துள்ளது.
குறிப்பாக price-to-income ratio ,அதாவது வீட்டின் வீடுகளின் விலை மதிப்பு மற்றும் வருமானம் ஆகிய இரண்டையும் ஒப்பீடு செய்து பார்க்கும் போது இந்த விகிதம் 2020 ஆம் ஆண்டில் 6.6% ஆக இருந்து தற்போது 7.5 % சதவீதம் என அதிகரித்துள்ளது. அதாவது வீடுகளின் மதிப்பு உயர்ந்ததற்கு ஏற்ப மக்களின் வருமானம் உயரவில்லை என்பதை தான் இது குறிப்பிடுகிறது.
இந்த பட்டியலின் அடிப்படையில் இந்தியாவிலேயே வீடு வாங்க முடியாத நகரங்களாக டெல்லி மற்றும் மும்பை ஆகியவை இருக்கின்றன. மும்பையில் price-to-income ratio 14.3 எனவும் டெல்லியில் 10.1 எனவும் இருக்கிறது. இந்த ஆய்வறிக்கை ஒரு ஒரு வீட்டின் வருமானம் மற்றும் அதன் சொந்த வீடு வாங்குவதற்காக அவர்கள் செலுத்த வேண்டிய ஈஎம்ஐ தொகை ஆகிய இரண்டின் அடிப்படையில் EMI-to-income ratio அடிப்படையிலும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு 46 % ஆக இருந்த EMI-to-income ratio நடப்பாண்டில் 61% என அதிகரித்துள்ளது , குறிப்பாக டெல்லியில் இது 82 % என அதிகரித்துள்ளது. அதே வேளையில் சென்னை, அகமதாபாத், கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களில் இது 50% கீழ் தான் இருக்கிறது. அதாவது ஒரு குடும்பம் அவர்களின் மாத வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் கீழ் உள்ள தொகையை ஈஎம்ஐ-ஆக செலுத்தினால் போதும் என்ற சூழல் இந்த மூன்று நகரங்களிலும் நிலவுகிறது என இந்த அறிக்கை கூறுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications