சென்னை: சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பமான நகரமாக சென்னை மாறி வருகிறது என ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் 2025 -2026 ஆம் ஆண்டுகளுக்குள் சென்னையில் 12 - 13 மில்லியன் சதுர அடி அளவிலான பிரீமியம் அலுவலக இடங்கள் உருவாகும் என 'Tamil Nadu: The Next Frontier for Global Corporations' என்ற பெயரில் சிபிஆர்இ வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சென்னையில் மாநில அரசின் வழிகாட்டி அமைப்பான கைடன்ஸ் தமிழ்நாடு மற்றும் கிரியட்டர்ஸ் ஒர்க்ஸ் அமைப்பு இணைந்து 'GCC Next Summit 24' என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தை நடத்தினர்.இந்தக் கூட்டத்தில் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பமான நகரமாக சென்னை மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் குளோபல் கெப்பாபிலிட்டி சென்டர் என அழைக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் திறன் மையங்கள் சென்னையில் அதிகரித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் திறன் மையங்களில் பணி செய்யும் சர்வதேச தரத்திலான திறன் பெற்ற பணியாளர்களில் 11 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தற்போது சென்னையில் 250 ஜிசிசி மையங்கள் செயல்படுகின்றன என்றும் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இது 450 முதல் 460 என அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் தற்போது ஜிசிசி மையங்களுக்கான அலுவலக இடங்களை லீசுக்கு வழங்குவதில் பெங்களூரு நகரம் முதலிடத்திலும் ஹைதராபாத் நகரம் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இதற்கு அடுத்ததாக சென்னை மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
சென்னையில் இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகளுக்காக அலுவலக இடங்கள் உருவாக்கப்படுவது 2022 ஆம் ஆண்டில் 1.4 மில்லியன் சதுர அடியாக இருந்து நடப்பாண்டில் 2.3 மில்லியன் சதுர அடி என அதிகரித்துள்ளதாம். மேலும் சென்னையில் இது போன்ற ஜிசிசி மையங்களுக்கு தேவையான திறன்மிகு பணியாளர்களின் எண்ணிக்கை 1.4 மடங்காக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதற்கு கல்வி நிறுவனங்களோடு சேர்ந்து அரசு எடுத்து வரும் பல்வேறு முன் முயற்சிகளும், திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் காரணம் என சொல்லப்படுகிறது. சென்னையில் ஜிசிசி மையங்களை அமைத்ததில் 67% அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் என இந்த அறிக்கை கூறுகிறது. சென்னையில் குறிப்பாக ஓஎம்ஆர் சாலை ,மவுண்ட் பூந்தமல்லி ஹை ரோட் மற்றும் பிடி சாலை ஆகிய இடங்களில் தான் ஜிசிசி மையங்கள் அதிக எண்ணிக்கையிலான அலுவலகங்களை லீசுக்கு எடுத்துள்ளனவாம்.
வரும் 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவது என அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் இந்த அறிக்கை ஜிசிசி மையங்கள் உட்பட தமிழ்நாடு தொழில் ரீதியாகவும், சேவை ரீதியாகவும் எவ்வாறு விரிவாக்கமடைந்து வருகிறது என தெரிவித்துள்ளது. கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களும் உற்பத்தி மையங்களாக வளர்ச்சி அடைந்து வருவதாக கூறியுள்ளது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications