இந்தியாவில் புல்லட் ரயில் போக்குவரத்தை கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், பெங்களூரு மற்றும் சென்னை இடையே அதிவேக புல்லட் ரெயில் திட்டம் கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.
தென்னிந்தியாவின் பிரதான நகரங்களாக சென்னை மற்றும் பெங்களூரு இருக்கின்றன. சென்னை உற்பத்தி மையமாகவும் பெங்களூரு ஸ்டார்ட் அப் நகரமாகவும் இருக்கும் நிலையில் வேலை, தொழில் ரீதியாக இரு நகரங்களுக்கும் இடையே தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.

தற்போது சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமாவது ஆகிறது. ஆனால் இனில் 1.13 மணி நேரத்திலேயே பெங்களூருவில் இருந்து சென்னையும், சென்னையில் இருந்து பெங்களூருவும் செல்லலாம். மத்திய அரசு கொண்டு வரும் புல்லட் ரயில் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தார் பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் வெறும் 73 நிமிடங்கள் அதாவது 1 மணி நேரம் 13 நிமிடங்களாக மட்டுமே இருக்கும்.
தற்போது இரு நகரங்களுக்கு இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலில் பயண நேரம் சுமார் 4 மணி 25 நிமிடங்களாக உள்ளது. அதுவே விமானம் என்றால் 1 மணி நேரத்தில் சென்றுவிடலாம். ஆனால் அதற்கு நாம் விமான புறப்படும் 2 மணி நேரம் முன்பாகவே விமான நிலையம் செல்ல வேண்டும், பின்னர் அங்கிருந்து நகரத்திற்குள் செல்ல வேண்டும் என எப்படியும் 4 மணி நேரமாவது நாம் செலவிட வேண்டும்.
ஆனால் இந்த புல்லட் ரயில் பயணமானது விமானத்தில் பயணிக்க ஆகும் நேரத்தை விட குறைவான நேரத்தை எடுத்து கொள்ளும் என மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. பெங்களூரு - சென்னை புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் பயண நேரம் வெகுவாக குறையும். விரைவில் மத்திய அரசு இதற்கான பணிகளை ரயில்வே அமைச்சகம் மூலம் தொடங்க உள்ளது.
சென்னை பெங்களூரு இடையே 359 கிலோமீட்டர் தொலைவு இருக்கிறது. இதனை 73 நிமிடங்களீல் கடக்க வேண்டும் என்றால் ரயில் மணிக்கு 295 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும். தற்போது வந்தே பாரத் ரயில் மணிக்கு 81 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. அப்படி பார்த்தால் புல்லட் ரயில் இதனை விட 3.6 மடங்கு வேகத்தில் பயணிக்க வேண்டும்.
இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார மையங்களாக விளங்கும் நகரங்களை இணைப்பதன் மூலம் வர்த்தகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பரிமாற்றங்கள் அதிகமாகும். எனவே இது இரு நகரங்களின் வளர்ச்சிக்குமே பேருதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications

