சென்னை - பெங்களூரு இடையே அமைக்கப்பட்டு வரும் பசுமைச் சாலை மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யும் காரணங்களால் தாமதமாகியுள்ளது. சுமார் ரூ.17,000 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த திட்டம், இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை 6 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த நிலையில், இத்திட்டம் ஜூன் 2026ஆம் ஆண்டுக்குள் முழுமையாக முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
262 கிமீட்டர் நீளமுள்ள இந்த நான்கு வழி விரைவுச் சாலையில், வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணிக்க அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் 8 வழிச்சாலையாகவும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள 71 கிமீ பகுதி டிசம்பர் 2024ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 106 கிமீ பகுதியில் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் 80 கிமீ பணிகள் முடிவடைந்துள்ள போதும், மீதமுள்ள பகுதிகளில் மின் கோபுரங்களை இடமாற்றம் செய்வதில் தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்கள் நீடிக்கின்றன. இத்திட்டம் தாமதமாவதற்கு முக்கிய காரணமே, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான 102 உயர் மின்னழுத்த மின் கோபுரங்களை இடமாற்றம் செய்வதுதான்.
இந்த கோபுரங்கள், காஞ்சிபுரம் - ராணிப்பேட்டை இடையே 400 kV DC மின் இணைப்பின் ஒரு பகுதியாகும். இதில் 80 கோபுரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டாலும், மீதமுள்ள 22 கோபுரங்கள் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களால் தாமதமாகியுள்ளன.
இதுதொடர்பாக திட்ட அதிகாரிகள் கூறுகையில், உயர் மின்னழுத்த கோபுரங்களை இடமாற்றம் செய்வது என்பது நிலம் கையகப்படுத்துவதை போன்றது அல்ல. இதற்கு புதிய நிலத்தை அடையாளம் காண்பது, மின்பாதைகளை மாற்றுப் பாதையில் அமைப்பது போன்ற நிறைய சவால்கள் உள்ளன. மேலும், சில நில உரிமையாளர்கள் கோபுரங்களை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இது திட்டத்தில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விரைவுச் சாலை செல்லும் ஆந்திர மாநிலத்தில் 85 கிமீ நீளமுள்ள மலைப்பகுதியில் 68 கிமீ பணிகள் நிறைவடைந்துள்ளன. தமிழ்நாட்டில், இந்த சாலை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குடிப்பல்லா-வாலாஜாபேட்டை பிரிவில் 95% பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், மின் கோபுர இடமாற்றம் அதிகமுள்ள ஆற்காடு-காஞ்சிபுரம் பிரிவில் 50% பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.
அதேபோல் காஞ்சிபுரம்-ஸ்ரீபெரும்புதூர் பிரிவில் 70% பணிகள் முடிந்துள்ளன. இந்த விரைவுச் சாலை முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, தற்போதுள்ள சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications