இந்திய ரியல் எஸ்டே்ட துறையில் தற்போது அதிகப்படியான வீட்டுக் கடன் வட்டி விகிதம் காரணமாக வீட்டு வசதி பிரிவில் வர்த்தகம் மிகவும் மந்தமாக உள்ளது. ஆனால் ரீடைல் மற்றும் அலுவலக ரியல் எஸ்டேட் பிரிவின் வர்த்தகம் எப்போதும் இல்லாத வகையில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த நிலையில் ஜூன் காலாண்டில் இந்தியாவின் டாப் 7 மெட்ரோ நகரங்களில் செய்யப்பட்ட மொத்த அலுவலக குத்தகையில் சுமார் 59 சதவீதம் தென்னிந்தியாவின் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் மட்டுமே செய்து அலுவலக ரியல் எஸ்டேட் பிரிவில் ஆதிக்கம் செலுத்துகிறது என Vestian நிறுவனம் கூறுகிறது.

ஜூன் காலாண்டில் இந்தியாவில் சுமார் 13.9 மில்லியன் சதுரடி அளவில் அலுவலக இடங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது, இதில் 8.2 மில்லியன் சதுரடி பரப்பளவுக்கான குத்தகை ஒப்பந்தம் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் மட்டுமே குத்தகைக்கு கொடுத்துள்ளது.
நாட்டின் 7 முக்கிய நகரங்களில் அலுவலக இடங்களுக்கான குத்தகை ஒப்பந்தம் கடந்த ஆண்டு 14.8 மில்லியன் சதுரடிக்கு செய்யப்பட்ட நிலையில், இந்த ஜூன் காலாண்டில் 6 சதவீதம் குறைந்து 13.9 மில்லியன் சதுரடிக்கு மட்டுமே குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த சரிவுக்கு முக்கியமான காரணம் இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் அலுவலகங்களை அமைப்பது குறித்த முடிவு எடுக்க ஏற்பட்ட தாமதம், மந்தமான சர்வதேச பொருளாதார சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகத்தை துவங்குவதில் காட்டிய தயக்கம் ஆகியவையே பெரும் பாதிப்பாக அமைந்தது.
இதேவேளையில் மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் ஜூன் காலாண்டில் இந்தியாவில் அலுவலக இடங்களுக்கான டிமாண்ட் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூன் காலாண்டில் அலுவலக இடங்களுக்கான குத்தகை ஒப்பந்தத்தில் பெரிய அளவில் ஆதிக்கம் செய்தது தொழில்நுட்ப நிறுவனங்கள் தான், இதை தொடர்ந்து இன்ஜினியரிங், உற்பத்தி துறை நிறுவனங்கள்.
அலுவலக குத்தகையில் சுமார் 59 சதவீதம் தென்னிந்தியாவின் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளது மூலம் இந்த 3 நகரங்களில் அதிகப்படியான நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகத்தை திறந்து வருவது தெரிகிறது. இதன் வாயிலாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications