தலை சுத்துதுடா சாமி, பெங்களூர் வாசிகள் கண்ணீர்.. சம்பளத்தில் பாதி இதுக்கே போகுது, அப்போ சென்னை மக்கள்!

இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் வாடகை வீட்டுக்கான டிமாண்ட் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள வேளையில் சராசரி மாத வாடகை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சொந்தமாக வீடு வாங்க திட்டமிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சொந்தமாக வீட்டை வாங்க முயலும் மக்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் காரணத்தால் சொந்த வீடு வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் பல வீடுகள் பல மாதங்களாக காலியாக இருந்தது மட்டும் அல்லாமல் பல வருடங்கள் வீட்டு வாடகை அதிகரிக்காமல் இருந்த நிலையில், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ள வேளையில் work from home முழுமையாக நீக்கப்பட்ட நிலையில் பெரு நகரங்களுக்கு மக்கள் படையெடுக்கும் காரணத்தால் வாடகை வீட்டுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.

தலை சுத்துதுடா சாமி,பெங்களூர் வாசிகள் கண்ணீர்..சம்பளத்தில் பாதி இதுக்கே போகுது, அப்போ சென்னை மக்கள்!

இதன் வாயிலாக வாடகைக்கு விடும் வீட்டின் உரிமையாளர்கள் வாடகையை தாறுமாறாக அதிகரித்து வருகின்றனர். இதனால் பெரு நகரங்களில் வீட்டு வாடகை கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாட்டின் முன்னணி சொத்து ஆலோசகர் அனாரோக் நாட்டின் முக்கியமான நகரங்களில் எந்த அளவுக்கு வீட்டு வாடகை அதிகரித்துள்ளது என பட்டியலிட்டு உள்ளது.

பெங்களூரு, புனே, டெல்லி-என்சிஆர், மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் சராசரி மாத வாடகை கடந்த ஒரு வருடத்தில் 11 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதில் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் சில பகுதிகளில் வீட்டு வாடகை 24 சதவீதம் உயர்ந்துள்ளது.

7 முக்கிய நகரங்களில் கடந்த ஒரு வருடத்தில் 1,000 சதுர அடி கொண்ட இரண்டு பெட்ரூம் அடுக்குமாடி குடியிருப்புக்களின் சராசரி மாத வாடகை உயர்வை கணக்கீடும் போதும் வடக்கு மற்றும் கிழக்கு பெங்களூரில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 24% வரை வாடகை உயர்ந்துள்ளத என்று அனரோக் தெரிவித்துள்ளது.

பெங்களூரில் உள்ள தனிசந்திரா மெயின் ரோடு மற்றும் மாரத்தஹள்ளி-ஓஆர்ஆர் ஆகியவை ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 1,000 சதுர அடி பரப்பளவு கொண்ட 2BHK வீட்டிற்கான வாடகை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. 22,500 ரூபாயாக இருந்த மாத வாடகை 27000 முதல் 28500 வரையில் அதிகரித்துள்ளது.

2022 ஜனவரி-மார்ச் மற்றும் 2023 ஜனவரி-மார்ச் இடையே வாடகையில் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் மற்றும் சர்ஜாபூர் பகுதியில் 21% மற்றும் 20% மாத வாடகை அதிகரித்து இந்நகரின் வாடகை அதிகரிப்பில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. கிழக்கு மற்றும் வடக்கு பெங்களூரு பகுதிகளில் வாடகை வீட்டின் தேவை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால் தான் இந்த பிரச்சனை என தெரிகிறது.

இதேபோல் சென்னையில் பெரம்பூர்-ல் 2022 ஜனவரி-மார்ச் 1000 சதுரடி கொண்ட 2BHK வீட்டிற்கு 16800 ரூபாயாக இருந்த வீட்டு வாடகை 10 சதவீத உயர்ந்து 18500 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் பல்லாவரத்தில் 16 சதவீதம் உயர்ந்து 18000 ரூபாயாக அதிகரித்துள்ளது, ஓரகடத்தில் 11 சதவீதம் அதிகரித்து 13,500 ரூபாயாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+