நாடு முழுவதும் நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வந்துள்ளது. இதனால் சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து தீபாவளியை கொண்டாடும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் எல்லாம் திங்கள்கிழமை அடுத்த நாளான செவ்வாய்க்கிழமையும் தீபாவளி பண்டிகைக்காக அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 4 நாட்கள் பண்டிகை கொண்டாடி உற்றார் உறவினர்களோடு மகிழ்வுடன் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இந்தியாவின் பெருநகரங்களில் எல்லாம் வசித்து வந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருக்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அன்று இரவு வரை எங்கு பார்த்தாலும் சென்னை , பெங்களூரு சாலைகள் எங்கும் வாகனங்களாகவே காட்சி தந்தன.
மக்கள் அரசு சிறப்பு பேருந்துகள், தனியார் பேருந்துகள் தங்களின் கார்கள், பைக்குகள் ஆகியவற்றின் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்பட்ட சென்னை மற்றும் பெங்களூர் சாலைகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. கிட்டதட்ட ஊரே காலியானது போல காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று இருக்கின்றனர். சொந்த வாகனங்கள் தவிர அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்டவற்றிலும் இலட்சக்கணக்கான மக்கள் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு குடும்பத்தோடு பயணம் செய்திருக்கின்றனர்.
இதனால் சென்னையின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து குமார் 27 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது . மீதமுள்ள சிலர் இன்றைய தினம் பயணம் மேற்கொள்வார்கள் . இதன் காரணமாக பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன .

இதே சூழல் தான் பெங்களூருவிலும் காணப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்னர் வரை போக்குவரத்து நெரிசல் இரண்டு கிலோ மீட்டரை கடக்க 5 மணி நேரம் டிராபிக் ஜாம் என பலரும் பதிவிட்டு வந்த பெங்களூர் சாலைகள் அனைத்தும் தற்போது காலியாக காட்சியளிக்கின்றன. பெங்களூருவில் தற்போது இருக்கக்கூடிய மக்கள் இது பெங்களூர் தானாக என தங்களை தொட்டு பார்த்துக்கொள்ளும் அளவிற்கு எப்போதும் பிசியாகவும் பரபரப்பாகவும் காணப்படும் சாலைகள் எல்லாம் தற்போது அமைதியாக இருக்கின்றன.
ஒன்று இரண்டு வாகனங்கள் மட்டுமே சாலைகளில் செல்வதை காண முடிகிறது . எக்ஸ் பக்கத்தில் பலரும் இதனை பதிவு செய்து வருகின்றனர். ஒரு நபர் கிட்டத்தட்ட பாதி பெங்களூர் ஆகிவிட்டது இந்திரா நகருக்கு 15 நிமிடங்களில் என்னால் செல்ல முடிகிறது எனக் கூறியிருக்கிறார் .மற்றொரு நபர் தற்போதைக்கு பெங்களூருவில் பெங்களூரு மக்கள் மட்டுமே தான் வசிக்கிறார்கள் போல என தெரிவித்திருக்கிறார் . ஒரு சிலர் இப்படி ஒரு அமைதியான பெங்களூருவை காண்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஆனால் இது சில நாட்களுக்கு தான் என கூறியுள்ளனர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications