தென்னிந்திய மாநிலங்கள் மத்தியில் பொருளாதார வளர்ச்சியில் கடுமையான போட்டி நிலவி வரும் வேளையில் யார் முதலில் வாய்ப்பை பெறுவது என்பதில் கடுமையான போட்டி நிலவி வரும் வேளையில் சென்னையில் அடுத்தடுத்து முக்கிய திட்டங்களின் அறிவிப்புகள் வெளியாகி வருவது மட்டும் அல்லாமல் ஐடி, கட்டுமானம், உள்கட்டமைப்பு, உற்பத்தி என பல துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகி வருகிறது.
இதனால் வேலைவாய்ப்பை தேடிக்கொண்டு இருப்பவர்கள் சென்னைக்கு சென்றால் தங்களுடைய திறனுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை எளிதாக பெற முடியும், அல்லது திறனை மேம்படுத்துவதற்கான பணிகளையும் செய்ய முடியும். இந்த முதலீட்டு, வேலைவாய்ப்பு BOOM-ஐ யாரும் மிஸ் செய்துவிடாதீர்கள். கண்முன் தோற்றும் அனைத்தும் வாய்ப்புகளாக மாற்றும் நேரம் இது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சேவையின் பலன்கள் அனைவருக்கும் கிடைக்க அடிப்படை தேவையாக இருக்கும் டேட்டா சென்டர்-ஐ சுமார் 1500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்து வரும் CtrlS Data Center அம்பத்தூரில் கட்டப்பட்டு வருகிறகு. சுமார் 14 மாடிக்கு கட்டப்பட்டு வரும் இந்த டேட்டா சென்டர் இந்தியாவிலேயே உயரமான டேட்டா சென்டராக இருக்கும். CtrlS Data Center-ன் கட்டுமான பணிகள் விரைவில் முடிய உள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Agilysys என்னும் நிறுவனம் சென்னை ராமானுஜம் இன்டெஸியான் ஐடி பார்க்-ல் சுமார் 1,81,900 சதுரடி கொண்ட அலுவலக இடத்திற்கு குத்தகை ஒப்பந்தம் செய்துள்ளது. 2003ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், ஹாங்காங், மலேசியா, சென்னை என உலக நாடுகளில் பல இடங்களில் அலுவலகம் வைத்து இயங்கி வருகிறது.
இதை தொடர்ந்து உலகளாவிய பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனமான Haworth, சென்னையில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது. இதற்காக Haworth நிறுவனம் சுமார் 10 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளது, இது Haworth-வின் 2வது இந்திய உற்பத்தி தளமாகும். இந்திய தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பர்னிச்சர்கள் இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. Haworth-வின் புதிய தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூர்-ல் அமைய உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது செய்யாறு சிப்காட் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, தற்போது இங்கு Schwing Stetter நிறுவனத்தின் குளோபல் உற்பத்தி தளம், இதுதவிர ராயல் என்பீல்ட், கிராசிம் பெயின்ட்ஸ், Autolive போன்ற பல நிறுவனங்கள் அடுத்தடுத்து வர உள்ளது. ஏற்கனவே பல நிறுவனங்கள் இங்கு கட்டுமான பணிகளை துவங்கியுள்ளது.

கலிபோர்னியாவின் KLA TENCOR நிறுவனம் புதிதாக கட்டப்பட்டு வரும் DLF DOWNTOWN டெக் பார்க்-ல் சுமார் 3.2 லட்சம் சதுரடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த டெக் பார்க்கில் பெரும் பகுதி இடத்தை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் குத்தகைக்கு எடுத்துள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான முதலீடுகள் வரும் வேளையில் முதலீடுகள் அதிகமாக குவிந்திருக்கும் காரணத்தால் புதிய வேலைவாய்ப்பு, வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications