சென்னையில் தினமும் ஏதாவது ஒரு துறையில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டும், புதிய முதலீடு குவிந்தும் வருகிறது. தென்னிந்திய மாநிலத்தில் தமிழ்நாடு மட்டுமே தொடர்ந்து முதலீட்டைப் பெற்று வருகிறது. மற்ற மாநிலங்கள் புதிய முதலீட்டை ஈர்ப்பதில் மந்த நிலையை எதிர்கொண்டு வரும் வேளையில் தமிழ்நாடு மாஸ் காட்டி வருகிறது.
சென்னையில் புதிய டேட்டா சென்டர் அமைக்கும் திட்டத்திற்காக ஒரு பிரபல நிறுவனத்திடம் இருந்து நிலம் வாங்கியுள்ளது ஒரு கூட்டணி நிறுவனம். இதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனி நிறுவனம் அறிவித்த ஜிசிசி அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

டேட்டா சென்டர்: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், தகவல் தொழில்நுட்ப துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதேபோல் சென்னையில் இருந்து உலக நாடுகளுக்குச் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதால் கிளவுட் சேவையும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, டேட்டா சென்டர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வெப் வொர்க்ஸ் - ஐரன் மவுண்டன் கூட்டணி நிறுவனம், சென்னை அம்பத்தூரில், டேட்டா சென்டர்களின் மையமாகத் திகழும் பகுதியில், ஒரு புதிய டேட்டா சென்டரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

நிலம்: இந்த திட்டத்திற்காக வெப் வொர்க்ஸ் - ஐரன் மவுண்டன் கூட்டமைப்பு, சென்னை அம்பத்தூரில் பிரபல துணி விற்பனை நிறுவனமான போத்தீஸ் நிறுவனத்திடம் இருந்து 4 நில பகுதிகளைக் கையகப்படுத்தியுள்ளது.
திட்டத்தின் விபரம்: இந்த நிலத்தில் 36 மெகாவாட் திறன் கொண்ட, 10 தளங்கள் கொண்ட டேட்டா சென்டர் கட்டிடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டமைப்பு வசதிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மொத்த முதலீடு ₹1057 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
GCC அலுவலகம்: ஜெர்மனி நாட்டின் கால்பந்து உடை மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ், இந்தியாவில் தனது முதல் உலக திறன் மையத்தை (Global Capability Centre - GCC) நிறுவியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். சில மாதங்களுக்கு முன்பே இந்தியாவில் அலுவலகத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அடிடாஸ் சீனாவைத் தவிர ஆசியாவில் நிறுவனம் அமைக்கும் முதல் ஜி.சி.சி சென்னையில் திறக்கப்படுவது தான்.
சென்னையில் ஓஎம்ஆர் பகுதியில் உள்ள ஒலிம்பியா பின்னக்கிள் வளாகத்தில் இந்த புதிய ஜிசிசி அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப துறை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.சி.சி என்றால் என்ன?: ஜி.சி.சி என்பது பன்னாட்டு நிறுவனங்களால் நேரடியாக இந்தியாவில் நிறுவப்படும் ஒரு அலுவலகம். இங்கு நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கான முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படும். இதில் நிதி மேலாண்மை, மனிதவள பிரிவு, தகவல் தொழில்நுட்ப ஆதரவு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
அடிடாஸ் நிறுவனத்தின் ஜி.சி.சி ஏன் முக்கியமானது?: இந்தியாவில் திறமையான ஊழியர்களை இருப்பதால் இதனைப் பயன்படுத்தச் சென்னையில் அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள திறமைகளை உலகளவில் அங்கீகரிக்கும் வகையில் இந்த ஜிசிசி அமைக்கப்படுவது மட்டும் அல்லாமல் அடிடாஸ் போலப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் சென்னைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications